கேம்பஸ் நியூஸ்



ஜிப்மரில் படிக்க விருப்பமா?   

புதுச்சேரியிலுள்ள ஜிப்மரில் 2015, ஜனவரியில் தொடங்கவுள்ள மருத்துவ படிப்புகளான D.M மற்றும் M.ch. படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Cardiology, Clinical Immunology, Endrocriminology, Medical Oncology, Neonatology, Nephrology, Neurology, Pediatric Critical care ஆகிய பிரிவுகளில் D.  M. படிப்புகளும், Cardio Thoracic Vascular surgery, Neurosurgery, Pediatric surgery, Plastic surgery, Surgical Gastroenterology, Surgical Oncology, Urology ஆகிய பிரிவுகளில் வி.சிலீ. படிப்புகளும் வழங்கப்படும். இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட, M.D அல்லது DNB பட்டப்படிப்பை முடித்தவர்கள் இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் தேர்வின் மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பம் அனுப்பக் கடைசி நாள், 22.11.2014.
நுழைவுத்தேர்வு நடக்கும் தேதி 21.12.2014.
மேலும் விபரங்களுக்கு: http://jipmer.edu.in.

சாஸ்த்ரா பல்கலையில் தொலைநிலை பி.எட். படிப்பு!

தஞ்சாவூர், சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் தொலைநிலை கல்வி இயக்ககத்தில் பி.எட்.,  படிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது. அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பி.ஏ, பி.லிட், பி.எஸ்சி, பி.காம் ஆகிய பட்டப்படிப்போ அல்லது முதுகலை பட்டப்படிப்போ முடித்திருக்க வேண்டும்.
பல்கலைக்கழகத்தின் http://www.sastra.edu/edu  என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.600. தபால் மூலம் விண்ணப்பம் பெறுவதற்கான கட்டணம் ரூ.650.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.12.2014.

கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதளத்தைப் பார்க்கலாம்.

10, +2 கேள்வித்தாள்களில் மாற்றம்


சமீப காலமாக பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகளில் முதலிடம் மற்றும் இரண்டாம் இடங்களைப் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதே சமயம், பொதுத்தேர்வில் அதிக மார்க் பெற்று பொறியியல் மற்றும் மருத்துவக் கல்வியில் சேர்ந்துவிடும் மாணவர்கள் பட்டப்படிப்பில் ‘ஸ்கோர்‘ பண்ண முடியாமல் திணறுகின்றனர். எனவே, பிளஸ்2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பாடத்திட்டங்களை மத்திய அரசின் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டங்களுக்கு இணையாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அடுத்த கல்வியாண்டு முதல் மாணவர்களின் பொது அறிவை வளர்க்கும் கேள்விகள் இடம்பெறும் வகையில் +2, 10ம் மற்றும் பொதுத்தேர்வு கேள்வித்தாள்கள் மாற்றப்பட உள்ளன. மனப்பாடம் செய்து எழுதும் முறை இதன் மூலம் முடிவுக்கு வர உள்ளது.

பிஎச்.டி. படிப்புக்கு உதவித்தொகை!


பொறியியல், அறிவியல் மற்றும் மேலாண்மை துறைகளில் பிஎச்.டி. ஆய்வை மேற்கொள்ளும் மாணவர்கள் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை, என்.ஐ.டி., கோழிக்கோடு வரவேற்கிறது. 2014-ம் ஆண்டு டிசம்பர் மாத session-க்கு இந்த விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. ஒவ்வொரு பிரிவு ஆராய்ச்சிக்கும் தனி தகுதி நிலைகளும், உதவித்தொகை வித்தியாசமும் உண்டு. என்.ஐ.டி., கோழிக்கோட்டின் அதிகாரபூர்வ இணையதளம் சென்று, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.600. SC/ST பிரிவினருக்கு ரூ.300 மட்டுமே.

மேலும் விபரங்களுக்கு: www.nitc.ac.in.

ஐ.ஐ.எம்-மில் மேலாண்மை படிப்பு


அகமதாபாத்தில் உள்ள ஐ.ஐ.எம். நிறுவனத்தில் Fellow Programme in Management (FPM) எனும் மேலாண்மை படிப்புக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பல்வேறு சிறப்புப் பிரிவுகளில் இப்படிப்பு வழங்கப்படுகிறது. GMAT/GRE/GATE/UGCJRF ஆகிய தேர்வுகளின் மதிப்பெண் அடிப்படையில் , மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ.500.

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 30.1.2015.
மேலும் விபரங்களுக்கு: www.iimahd.ernet.in.

பயாலஜி துறையில் பிஎச்.டி. படிக்கலாம்

புனேவிலுள்ள சிமீறீறீ அறிவியலுக்கான தேசிய மையத்தில், மாடர்ன் பயாலஜி துறையில், பிஎச்.டி. ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ள விரும்பும் மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அறிவியலின் ஏதேனுமொரு பிரிவில், முதுநிலைப் படிப்பை முடித்து, குறைந்தபட்சம் 50% மதிப்பெண் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். அதிக அளவில் தகுதிவாய்ந்த மாணவர்கள் விண்ணப்பித்தால், நுழைவுத்தேர்வு மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.11.2014.
மேலும் விபரங்களுக்கு: www.nccs.res.in/phdadmissions.html.


டிசம்பர் 28ல் NET  தேர்வு!


கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் இளநிலை ஆராய்ச்சி ஃபெல்லோஷிப் மற்றும் உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கு தேசிய அளவில் ழிணிஜி தேர்வு நடத்தப்படுகிறது. இதுவரை இந்தத் தேர்வை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) நடத்தி வந்தது. இனி, மத்திய மேல்நிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு இரு முறை இந்தத் தேர்வு நடத்தப்படும். முதல் தேர்வை டிசம்பர் 28-ம் தேதி நடத்த சி.பி.எஸ்.இ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நெட் தேர்வுக்கு விண்ணப்பிப்போர் கவனத்துக்கு :

• நவ.15ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
• சிண்டிகேட் வங்கி, கனரா வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி மூலம் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த நவம்பர் 18ம் தேதி கடைசி நாள்.
• பிரதி எடுத்த விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட ஒருங்கிணைப்பு மையத்தில் சமர்ப்பிக்க நவம்பர் 25ம் தேதி கடைசி நாள்.
விபரங்களுக்கு: http://www. c.in

கேரள பல்கலையில் மாலைநேர எம்பிஏ படிப்பு!

திருவனந்தபுரத்தில் உள்ள கேரளா பல்கலைக்கழகத்தில், 2014-16ம் கல்வியாண்டுக்கான 2 வருட எம்.பி.ஏ மாலை நேர படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரமிது. அங்கீகாரம் பெற்ற பல்கலைக் கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப்
படிவத்தை www.keralauniversity.ac.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்
படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். மேலும் கூடுதல் தகவல்களுக்கு மேற்கண்ட இணையதளத்தைப் பார்க்கவும்.

குஜராத் பல்கலையில் ஃபாரன்சி படிப்பு


குஜராத் பல்கலையில் ஃபாரன்சிக் ஓடோன்டாலஜி' படிப்பு! குஜராத் பல்கலைக்கழகத்தில், எம்.எஸ்சி 'ஃபாரன்சிக் ஓடோன்டாலஜி' படிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம். அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இளங்கலை பல் மருத்துவப் படிப்பு முடித்தவர்கள் இப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.1000. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 21.11.2014க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

கூடுதல் விபரங்களுக்கு: www.gfsu.edu.in

இந்திராகாந்தி பல்கலையில் தொலைதூரக் கல்வி!

புதுடில்லியில் உள்ள இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எம்.ஏ, எம்.எஸ்சி, எம்.காம் ஆகிய படிப்புகளில் பல்வேறு பாடப்பிரிவுகளும், இளங்கலை, டிப்ளமோ, முதுகலை சான்றிதழ் உள்ளிட்ட படிப்புகளில் பல்வேறு பாடப்பிரிவுகளும் வழங்கப்படுகின்றன. விண்ணப்பப் படிவங்களை இக்னோ பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் அல்லது ரூ.250 செலுத்தி பல்கலைக்கழக வளாகத்தில் விண்ணப்பம் மற்றும் கையேட்டை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசிநாள்: 1.12.2014. அபராதத் தொகையாக ரூ.300 செலுத்தி

விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.1.2015
கூடுதல் விபரங்களுக்கு: www.ignou.ac.in.