விரலால் படிக்கலாம்!



பார்வைத் திறனற்ற மாற்றுத் திறனாளிகளுக்காக அமெரிக்கா வின் மாசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி நிறுவனம் உருவாக்கிய கருவி இது. ஒரு மோதிரம் போல இருக்கும் இதனை விரலில் மாட்டிக் கொள்ளலாம்.

அந்த விரலால் புத்தகத்தின் பக்கங்களைத் தொட்டுப் புரட்டும்போது, புத்தகத்தில் இருக்கும் எழுத்துகளை ஸ்கேன் செய்து இது சத்தமாகப் படிக்கிறது. கணினித் திரையிலும் இப்படி விரலால் நிரடி படிப்பது சாத்தியமே! இப்போதைக்கு ஆங்கிலத்தில் மட்டுமே படிக்கும் இதனை பல்வேறு மொழித்திறனுடன் உருவாக்கும் முயற்சி நடைபெறுகிறது.