நம்பினால் நம்புங்கள்



பெரும்பாலான மால்ட் சத்து பானங்களில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமாக சர்க்கரையே உள்ளது.

டீசல் கார்களை மாதம் 2 ஆயிரம் கிலோமீட்டர் பயன் படுத்துபவர்கள், பெட்ரோல் கார்களை விட ஆண்டுக்கு ரூ. 60 ஆயிரம் வரை சேமிக்க முடியும். இக்கணக்கீட்டின்படி, டீசல் கார் வாங்குவதற்கு கூடுதலாகச் செலவிட்ட தொகையை 2 ஆண்டுகளில் மீட்டுவிட முடியும்!

பதப்படுத்தப்படும் உணவுப்பொருட்கள், அவற்றின் 20 சதவீத ஊட்டச்சத்தை இழந்து விடுகின்றன.

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்கிறவர்களுக்கு, வயிற்றின் காப்பு உறை பாதிக்கப்பட்டு, கேன்சர் ஏற்படும் அபாயம் உண்டு.

மகாராஷ்டிர மாநிலத்தில் பெர்மிட் இல்லாமல் மது அருந்துபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது.

ஆன்லைன் ஸ்டோர்களில் வாங்கப்படும் பொருளில் குறைபாடு இருப்பின், 30 நாட்களுக்குள் திருப்பிக் கொடுத்து, முழுப்பணத்தையும் திரும்பப் பெறும் வசதியை, நுகர்வோர் பாதுகாப்பு மசோதா அளித்துள்ளது.

கார் தயாரிப்பாளர்கள் உறுதியளித்த மைலேஜ் அளவு சரியாக இருப்பதாக, 60 சதவீத உரிமையாளர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.

இந்தியாவில் பர்சனல் லோனுக்கு ஆண்டுக்கு 40 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. வரிகள் மற்றும் சேவைக்கட்டணங்கள் தனி.

மல்ட்டிப்ளெக்ஸ் தியேட்டர்களில் விற்கப்படும் பாப்கார்ன்களில் 85 சதவீத லாபம் கிடைக்கிறது.