தூவானம்




சுருட்டுப் பை


திருமணத்துக்குச் சென்று வந்தால் தேங்காய் (விலையைப் பொறுத்து சாத்துக்குடி), வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் என்று போட்டு தாம்பூலப் பை கொடுப்பது தமிழ்நாட்டில் வழக்கம். ஆனால் அதே பையில் ஒரு சுருட்டையும் போட்டு விநியோகிப்பது மியான்மர் நாட்டு வழக்கம். ‘சுருட்டு பிடிப்பதால் புற்றுநோய் வராது’ என்பது அவர்களது தவறான நம்பிக்கை.

வரக்கூடாத நோய்

தமிழ்நாட்டில் யாருக்கும் கிணிஞி   என்ற நோய் வரக்கூடாது என்று வேண்டிக்கொள்ள வேண்டும். ஏனென்றால் லட்சம் பேரில் ஒருவருக்கு மட்டுமே வரக்கூடிய இந்த நோய் கண்டவர்கள் கோடை காலத்தில் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறையும், குளிர்காலத்தில் அரை மணிநேரத் துக்கு ஒருமுறையும் குளித்துக்கொண்டே இருக்க வேண்டும். அவ்வளவு தண்ணீருக்கு எங்கே போவதாம்?

நாட்டின் அளவு

பிரான்ஸ் நாட்டுக்கும், ஸ்பெயின் நாட்டுக்கும் இடையே உள்ள ஒரு குட்டி நாடு, அன்டோரா. இது எவ்வளவு சிறிய நாடு என்பதை அதன் ராணுவ ‘பலத்’தை வைத்தே அனுமானிக்கலாம். இந்நாட்டின் ராணுவத்தில் ஒரு அதிகாரி, 6 சிப்பாய்கள், 4 பொது ஊழியர்கள் என மொத்தமே 11 பேர்தான்.

இறுதி ஊர்வலத்தில் முதல்

இதுவரை மேற்கொள்ளப்பட்ட இறுதி ஊர்வலங்களிலேயே மிக அதிகமான பேர் பங்கேற்றது, தமிழக முதல்வராகப் பணியாற்றிய அண்ணா 1969ம் ஆண்டு மரணமுற்றபோதுதான். மொத்தம் ஒன்றரைக் கோடிப் பேர் இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டதாகக் காவல் துறை கணக்கெடுத்துள்ளது.

போர்ச்செலவு

உலகப் போர்களிலேயே மிகவும் அதிகச் செலவு வைத்தது இரண்டாவது உலகப் போர்தான். 193940ம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்தப் போருக்கான செலவு, ஆறு லட்சம் கோடி ரூபாய். இது அந்தப் போர்க் காலத்திய கணக்கு!

கேலிப் பாடலே குழந்தைப் பாடலாயிற்று!

‘பாபா பிளாக் ஷீப்’ என்று குழந்தைகளுக்கான நர்ஸரி ரைம் ஒன்று உண்டு. இது குழந்தைகளுக்காக எழுதப்பட்டதே அல்ல. 1275ம் ஆண்டு, இங்கிலாந்து அரசு, கம்பளி உடைகள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அதிக வரி விதித்ததை எதிர்த்து அரசை கேலி செய்து எழுதப்பட்ட பாடல் இது!

உறைக்குள் கடிதம்

ஒரு தாளில் கடிதம் எழுதி அதை ஓர் உறைக்குள் மடித்து வைத்து அஞ்சலில் அனுப்பும் வழக்கம் 1839ம் ஆண்டு ஆரம்பித்தது. பியர்சன் என்ற அமெரிக்கருக்கு உதித்த உத்திதான் இது. வெறும் உத்தியோடு அதை விட்டு விடாமல், வியாபாரமாகவும் ஆக்கிக்கொண்டார் பியர்சன். ஆமாம், அப்படி கடிதங்களை வைத்து அனுப்பும் உறைகளைப் பல அளவுகளில் தயாரித்து விற்பனையும் செய்தார் அவர்.

முன் நடை, பின் நீச்சல்!

இறால் நண்டு, நீர், நிலம் இரண்டிலும் வாழும் ஓர் உயிரினம். இது நிலத்தில் ஒரு மாதிரியும், நீரில் ஒரு மாதிரியுமாக வாழ்கிறது. ஆமாம், நிலத்தில் நடக்கும்போது முன் நோக்கி அடியெடுத்து நடக்கிறது; நீரில் நீந்தும்போது பின்னோக்கிக் கால்களை அசைத்துத்தான் நீந்துகிறது.

வித்யுத்