மகிழ்ச்சி சிகிச்சை!



வலியிலும் வேதனையிலும் தவித்தபடி சிகிச்சை எடுத்துக் கொள்ளும் நோயாளிகளுக்கு, மருந்தைப் போலவே தேவைப்படும் இன்னொரு விஷயம், மகிழ்ச்சி! இதைப் புரிந்து வைத்திருக்கிறார்கள், அமெரிக்காவின் சிகாகோ நகரில் இருக்கும் ‘மேன் இன் ஹெவன்’ அமைப்பினர்.

இவர்களிடம் இரண்டு மினியேச்சர் குதிரைகள் உள்ளன. ஒரு நாய் அளவுக்கு உயரத்தில் இருக்கும் இந்தக் குதிரைகளைக் கூட்டிக்கொண்டு மருத்துவமனைகளுக்குச் சென்று, படுக்கையில் இருக்கும் நோயாளி களை மகிழச் செய்கிறார்கள். இதனால் அவர்கள் விரைவில் குணம் பெறுகிறார்களாம்!