Google 10



இன்று கூகுள் இல்லாமல் எதுவுமே இல்லை என்றாகிவிட்டது. ஆண்டிப்பட்டி முதல் அமெரிக்கா வரை நமக்கு வேண்டிய தகவல்களை எல்லாம் தேடித் தேடி தருகின்ற கூகுளுக்கு வயது 21. கூகுளின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக இணையத்தில் அதன் சிறப்பம்சங்களை பட்டியலிட்டு வருகின்றனர். அவற்றில் பத்து இதோ...

உலகத்தில் அதிகளவு பார்க்கப்பட்ட, பார்க்கப்படும்  இணையதளம் கூகுள். லேரி பேஜ் மற்றும் செர்கே ப்ரின் என்ற இரண்டு கல்லூரி மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டதுதான் கூகுள். ‘கூகொல்’ என்ற சொல்லில் இருந்து வந்ததுதான் கூகுள். இதன் பொருள் ஒன்றுக்கு பக்கத்தில் 100 பூஜ்ஜியம் போடுவதால் வரும் எண்ணைக் குறிப்பதாகும். முதல் கூகுள் டூடுல் 1998ல் ‘burning man’ நிகழ்வுக்காக உருவாக்கப்பட்டது.

ஜான் லெனனின் 70 வது பிறந்த நாளுக்கு வெளியான டூடுல்தான் முதல் விடியோ டூடுல் ஆகும்.கூகுளின் தலைமை அலுவலகம் கூகுள்ப்ளெக்ஸ் என அழைக்கப்படுகிறது.

இது கலிஃபோர்னியாவில் உள்ள சிலிகான் வேலியில் உள்ளது.கூகுளின் தலைமை அலுவலகத்தில் டி-ரெக்ஸ் டைனோசரின் பெரிய சிலை ஒன்று உள்ளது. இது அடிக்கடி ஃப்ளமிங்கோ பறவையால் மறைக்கப்படும். கூகுள் எப்போதும் அழிந்துவிடக்கூடாது என்று ஊழியர்களுக்கு உணர்த்துவதற்காக இவ்வாறு செய்யப்படுகிறதாம்.

லெகோ எனப்படும் பிளாஸ்டிக் பொம்மை பாகங்களைக் கொண்டு  செய்யப்பட்ட பெட்டியில்தான் கூகுளின் முதல் சர்வர் இடம் பெற்றிருந்தது.
இந்த தலைமை அலுவலகம் மிகவும் பசுமையாக இருக்கும். அங்கே புல்லை சீர் செய்வதற்கு தோட்டக்காரர்களுக்கு பதிலாக ஆடுகள் இருக்கும்.

தனது ஊழியர்களுக்கு விலையின்றி உணவு அளித்த முதல் பெரிய தொழில்நுட்ப நிறுவனம் கூகுள்தான். ஊழியர்கள் தங்கள் செல்லப்பிராணியான நாய்களைக் கொண்டுவரவும் அனுமதி உண்டு.கூகுள் இமேஜ் தேடுதல் 2001 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.