இந்த போனின் விலை ரூ.1,64,999



இதோ டிஜிட்டல் உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த ‘சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு’ இந்தியாவில் வெளியாகிவிட்டது. அக்டோபர் 4- ம் தேதியிலிருந்து போனை ஆர்டர் செய்யலாம். 20-ம் தேதி யிலிருந்து போன் டெலிவரி செய்யப்படும். டேப்லெட் அளவில் உள்ள இந்தப் போனை மடித்து விரித்து பயன்படுத்திக்கொள்ள முடியும்.

இதன் ஒவ்வொரு அம்சமும் சிக்ஸர் அடிக்கிறது. 4ஜி, 5ஜி என இரண்டு மாடல்கள்.7.3 இன்ச் மற்றும் 4.6 இன்ச் என இரண்டு டிஸ்பிளேக்கள். அதாவது, மடித்த நிலையில் இருக்கும்போது 4.6 இன்ச் ஸ்மார்ட்போன் போல பயன்படுத்த முடியும். திரையை விரிக்கும்போது 7.3 இன்ச் கொண்டடேப்லெட்டாக மாறிவிடுகிறது.

12 ஜிபி ரேம், 512 ஜிபி ஸ்டோரேஜ் என அசத்துகிறது. 4.6 இன்ச் திரைக்கு ஒரு பேட்டரியும், 7.3 இன்ச் திரைக்கு மற்றொரு பேட்டரியும் என மொத்தம் 4,380 mAh திறன் கொண்ட இரண்டு பேட்டரிகள் இதன் ஸ்பெஷல். அத்துடன் ஆறு கேமராக்கள்.  16 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 12 எம்பி  வைடு-ஆங்கிள் கேமரா, 12 எம்பி டெலிபோட்டோ கேமரா என இதன் வடிவமைப்பு வியப்பூட்டுகிறது.

மட்டுமல்ல, ஒரே நேரத்தில் மூன்று செயலிகளைப் பயன்படுத்த முடியும். யூடியூப்பில் காணொளி ஒன்றை பார்த்துக்கொண்டே வாட்ஸ் அப், கூகுள் குரோமை இயக்க முடியும். பச்சை, நீலம், வெள்ளை, கருப்பு ஆகிய வண்ணங்களில் கிடைக்கும் இந்த போனின் விலை ரூ.1,64,999. இப்போதே அட்வான்ஸ் புக்கிங் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள் டிஜிட்டல் காதலர்கள்.