குரல் His Mind Voice



அதுர்ஷ்டம்னு ஒண்ணு வந்துருச்சீன்னு வய்யி, ஆகாய விமானத்துலேர்ந்து விழுந்தாக்கூட, ஒடம்புல போட்ருக்க சொக்காவே பாராசூட்டா மாறி, பத்திரமா வூட்டாண்ட கொண்டாந்து சேத்துடும். மெய்யாலுமே சொல்றேண்ணா! திடீர்னு சினிமால எனக்கு அப்பிடியொரு அதுர்ஷ்டம். நானே பாட்டெழுதி, நானே ட்யூன் போட்டு, நானே பாடிக்கிட்டிருந்தேனா, இப்ப ஆடவும் வச்சிட்டாங்க. நமக்கு குடிப்பழக்கம் இல்ல. இருந்தா, அப்பிடி இப்பிடின்னு ஆடிப்பாத்து பிராக்ட்டிஸ் பண்ணிருக்கலாம்.

கம்பல் பண்றாங்கோ, அப்பால நாம இன்னா பண்றது? நின்ன எடத்துலயே நின்னுகிட்டு, எடது பக்கம் திரும்பும்போது வலது கைய நீட்டி, வலது பக்கம் திரும்பும்போது எடது கைய நீட்டி, தம்மாத்துண்டு ஜர்க் குடுத்து சமாளிச்சிட்டிருக்கேன். அந்தக்கால ஈரோயின்ஸ் வெக்கப்பட சொல்ல, காலால அர வட்டம் போடுவாங்க பாரு, அத அப்பிடியே ஃபாலோ பண்ண ஆரம்பிச்சிட்டேன். ‘சூப்பரா ஆடறீங்கண்ணா’னு சர்டிஃபிகேட் தர்றாங்க.

கடலு, கப்பலு, படகு, மீன் வகைங்கோ, பீச்சு, சுண்டக்கஞ்சி, லவ்வர்ஸ் - இவ்ளோ இருந்தா போதும்பா! நம்ம பாட்டுக்கு வார்த்த பஞ்சமே வராது, நம்ம பாட்டுக்கு மெட்டுக்கட்டிக்கிட்டே போயிக்கினிருக்கலாம். சில மீசிக் டைரட்டர்ஸ் ‘மீட்டருக்குள்ள அடங்கல’ன்னு சொல்வாங்க. அதுக்கு நாம இன்னா பண்றது? இது மக்கள் பாட்டு. இதுக்கெல்லாம் ரூல்ஸ் அண்டு ரெகுலேசன் கூடாது. பாட்டக்கேட்டு என்ஜாய் பண்றாங்களா, அதுதான் இம்பார்ட்டண்டு. இன்னா நான் சொல்றது?