அப்பா வேணாம்ப்பா



தியேட்டரில் படம் ஆரம்பிப்பதற்கு முன் ‘குடி குடியைக் கெடுக்கும்’ என்று படத்தில் சம்பந்தப்பட்ட நடிகர் அல்லது இயக்குனர் பேக் வாய்ஸில் குரல் கொடுப்பார்கள். அந்தக் குரல்தான் படத்தோட கதை.

கதாநாயகன் வெங்கட்டரமணனுக்கு குடிதான் முக்கியம். குடித்தனம், குழந்தைகள் பற்றியெல்லாம் கவலைப்படாத மனிதர். எப்போதும் குடிமகனாக வலம் வரும் அவர் ஒரிஜினல் குடிமகனாக மாறினாரா, இல்லையா என்பது மீதிக் கதை.

நாயகன் வெங்கட்டரமணன் குடிமகன் கேரக்டரில் வாழ்ந்து காட்டியிருக்கிறார். படத்தின் இயக்குனரும் அவர்தான் என்பதால்  குடிமகன் கேரக்டரில் வெளுத்து வாங்கியிருக்கிறார். அவருடைய மனைவியாக வரும் ஜெயா மணவாளன், மகளாக நடித்திருக்கும் மதுமிதா, மகனாக நடித்திருக்கும் விஜயகுமார் ஆகியோர் கொடுத்த வேலையை சரியாகச் செய்திருக்கிறார்கள். வேதா செல்வம், வேல்முருகன் இருவரின் ஒளிப்பதிவு கதைக்களத்துக்கு மிக அருகில் அழைத்துச் செல்கிறது. கண்ணனின் இசையில் குறை யொன்றுமில்லை.