குண்டானார் சோனாக்‌ஷி!



‘பாஜிராவ் மஸ்தானி’ படத்தில் தனக்கு முக்கியத்துவம் இல்லை என்று வருத்தத்தில் இருக்கிறாராம் பிரியங்கா சோப்ரா.

நிகில் அத்வானி இயக்கும் படத்தில் நடிக்க ஸ்ருதிஹாசன் மறுத்துவிட்டார். 2017 வரை எனது கால்ஷீட் டைரி ஃபுல் என்கிறார்.

‘ரயீஸ்’ படத்துக்காக அவ்வப்போது தாடி வளர்த்து நடிக்கும் ஷாருக்கான், ‘ஃபேன்’ படத்துக்காக அதை வழிக்க வேண்டியிருக்கிறதாம்.

‘மொஹஞ்சதரோ’ ஷூட்டிங்கில் ஹ்ரித்திக் ரோஷன் காயம் அடைந்தார். மூட்டுப் பகுதியில் அவருக்கு அடிபட்டுள்ளது.

அமெரிக்க பாப் பாடகர் ஒருவருடன் நெருங்கிப் பழகி வருகிறார் பிரியங்கா சோப்ரா. இருவரும் சேர்ந்து வாழ்வதாகவும் கிசு கிசுக்கப்படுகிறது.



தனது மகள் நடிக்க சொன்னதாலேயே ‘தில்வாலே’ படம் மூலம் ரீஎன்ட்ரி ஆவதாக சொல்கிறார் கஜோல்.

மனைவி ஏகப்பட்ட கண்டிஷன் போடுவதால் முத்தக்காட்சியில் நடிக்கத் தயங்குகிறாராம் ஷாஹித் கபூர்.

சஞ்சய் தத் விரைவில் விடுதலை ஆவார் என தகவல் பரவியுள்ளதால் பல படங்களில் அவருக்கு குணச்சித்திர வேடங்கள் நிறைய காத்திருக்கிறதாம்.

தொடர்ந்து 18 நாள் லீவில் வீட்டில் இருந்ததால் மீண்டும் குண்டாகிவிட்டதாக சோனாக்‌ஷி சின்ஹா கவலைப்படுகிறாராம்.

சல்மான்கானின் பிரேம் ரத்தன் தன் பாயோ, விமர்சனங்களை தாண்டி ரூ.150 கோடியை இந்தியாவில் மட்டும் குவித்துவிட்டது.

- ஜியா