அமீஷா புலம்பல்!




சல்மான் கானின் ‘சுல்தான்’, பாக்ஸ் ஆபீசில் புது சரித்திரம் நிகழ்த்தியிருக்கிறது. முதல் வாரத்தில் இந்தியாவில் மட்டுமே ரூ.250 கோடி  வசூல்.

டைரக்டர் விக்ரம் பட் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாக சமீபத்தில் ஒரு பார்ட்டியில் ஃபுல் போதையில் புலம்பித் தள்ளியிருக்கிறார் அமீஷா படேல்.

டிசம்பரில் வெளியாகும் அமீர்கானின் ‘தங்கல்’ பட போஸ்டரின் ஃபர்ஸ்ட்லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அமீரும் பங்கேற்றார்.

“நல்லவர்களான ஆண்களை நான் நம்புவதில்லை. அவர்களை எனக்குப் பிடிப்பதுமில்லை” என்று ஃபேஸ்புக்கில் அதிரடியாக கருத்து தெரிவித்திருக்கிறார் தீபிகா படுகோன்.

‘அகிரா’ படத்தையடுத்து, மீண்டும் ஹீரோயின் ஓரியண்டட் சப்ஜெக்டில் நடிக்கத்தான் சோனாக்‌ஷி விரும்புகிறாராம். அவரது விருப்பத்துக்கு ஏற்ப ‘நூர்’ என்கிற படம் தொக்காக மாட்டியிருக்கிறது.

- ஜியா