லியோன் கிளுகிளு! கணவர் ஹேப்பி!!



‘பாகுபலி’ ரிலீஸாகி ஒரு வருடம் நிறைந்திருக்கிறது. இதற்காக அப்படக் குழுவினருக்கு மும்பையில் ஸ்பெஷலாக பார்ட்டி கொடுத்திருக்கிறார் டைரக்டர் கரண் ஜோஹர்.‘தீன்’ போன்ற கிளாசிக் படங்கள் ஓடாதது தனக்கு வருத்தம் அளிப்பதாக, அப்படத்தின் ஹீரோ அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.

தொண்ணூறுகளில் மகத்தான வெற்றி கண்ட ‘கல்நாயக்’ படத்தின் இரண்டாம் பாகமாக ‘கல்நாயக் ரிட்டர்ன்ஸ்’ படத்தை தயாரிக்க உள்ளார் சஞ்சய் தத். இதில் அவர் குணச்சித்திர வேடம் ஏற்பாராம்.

“பாலிவுட் படங்களில் கிளுகிளுப்பான வேடங்களில் நான் நடிப்பது கணவர் டேனியலுக்கு பிடித்திருக்கிறது” என்கிறார் சன்னி லியோன்.சல்மான் கானை குடிகாரன் என ஒரு முறை திட்டிய விவேக் ஓபராய், இப்போது அவரைப் போல நல்ல மனிதர்கள் குறைவு என புகழ்ந்துள்ளார்.

- ஜியா