சிறு கையேடாக சினிமா!



உலகம் உள்ளங்கையில் வந்துள்ள நிலையில் மக்களுக்கு எதையும் விரித்துச் சொன்னால்  பிடிப்பதில்லை; பிடிப்பதில்லை என்பதைவிட விரிவான விஷயத்தை, செய்தியை படிக்கவோ  கேட்கவோ அவர்களுக்கு நேரமில்லை என்பதே உண்மை. எஸ்.எம்.எஸ், வாட்ஸ் அப், டுவிட்டர் தகவல் போதும் என்கிற நவீன லைஃப் ஸ்டைலுக்கு மாற ஆரம்பித்துவிட்டார்கள். அதை உள்வாங்கிக்  கொண்டு வெளிவந்து கொண்டிருக்கும் திரையுலக புள்ளி விவரங்கள் அடங்கிய புத்தகம் ‘துளசி சினிமா நியூஸ்’.

‘பெருதுளசி’ என்ற பெயருக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் புத்தகத்தின் ஆசிரியர் பெரு துளசி பழனிவேல் முப்பொழுதும் சினிமா வட்டாரத்திலேயே சஞ்சரிக்கக்கூடியவர். அதனால் சினிமா உலகின் அனைத்து நிகழ்வுகள், சம்பவங்கள், படங்களின் பட்டியலை தனக்கேயுரிய ஸ்டைலில் தொகுத்திருப்பதால் புத்தகத்துக்கு இன்னும் மவுசு கூடுகிறது.

2018 ஆம் ஆண்டு நிகழ்வுகளை இப்போது வாசிக்கும்போது வியப்பாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கின்றன. அந்த சுவாரஸ்யங்களை வாசகர்கள் மிகவும் ரசிக்கிறார்கள் என்பதை கருத்தில் கொண்டுதான் இந்தப் புத்தகம் தொகுக்கப்பட்டிருக்கிறது.

பெருதுளசி பழனிவேல் நிருபராக எழுத ஆரம்பித்து... ஏ.வி.எம்.போன்ற நிறுவனங்களின் மக்கள் தொடர்பாளராக வளர்ந்து... தற்போதைய சினிமாவின் அனைத்து தகவல்களையும் சேகரிக்கும் ‘நடமாடும் தகவல் களஞ்சியம்’ என்று பெயர் எடுத்திருப்பது சினிமாவுக்குப் பெருமை!

- எஸ்