இன்பத்தைத் தூண்டும் பாடம்!ரீடர்ஸ் கிளாப்ஸ்!

கோடைக்கு ஏற்ற ஆடை. காட்டுது கவர்ச்சி மேடை. உணர்வைத் தூண்டும் ஜாடை. ஆண்டன்தாஸ் எடுத்த நடுப்பக்க படம், இன்பத்தைத் தூண்டும் பாடம்.
- கவிஞர் கவிக்குமரன், சென்னை-99.

இந்த வார வண்ணத்திரை கோடை வெயிலுக்கு ஓய்வு தரும் குளிர் தருவாய் அட்டகாசமான வண்ண புளோ-அப்புகளாய் நிறைந்திருந்தன.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

எம்.ஜி.ராமச்சந்தர் தன் பெயரை எண்கணிதத்துக்காக எம்.ஜி.ராமச்சந்திரன் என மாற்றிக் கொண்டார் என்று கூறுவார்கள். 30-ஆம் பக்கத்தில் ‘ராஜ
குமாரி’ விளம்பரத்தை வெளியிட்டு அதை மெய்ப்பித்திருக்கிறார் பைம்பொழில் மீரான்.
- எண்கணித நிபுணர் கே.கே.பாலசுப்பிரமணியன், குனியமுத்தூர்.

முன்னட்டை ராஷி கன்னா, பின்னட்டை ரகுல் ப்ரீத்சிங், உள்ளட்டை நீலம், நடுப்பக்க ரக்சனா மற்றும் புளோ-அப் படங்கள் என்று இவ்வார வண்ணத்திரை ஏகத்துக்கும் வண்ணமயம். Keep it up!
- எம்.சேவுகப்பெருமாள், பெருமகளூர்.

‘சூப்பர் டீலக்ஸ்’ படத்துக்கு நான்கு பக்கங்கள் ஒதுக்கி, விலாவரியாக விமர்சித்திருப்பதின் மூலம் ‘வண்ணத்திரை’க்கு சினிமாவுலகம் மீதான அக்கறை புரிகிறது.
- அ.காஜாமைதீன், நெய்க்காரப்பட்டி.

ஊரே சிரித்தாலும் பரவாயில்லையென்று என் மீது நம்பிக்கை வைத்து சினிமாவுக்கு வந்தேன், சினிமா என்னை கைவிடவில்லை என்கிற லிஸி ஆண்டனியின் வெளிப்படையான பேட்டி அவர் மீது மேலும் மதிப்பை ஏற்படுத்துகிறது.
- பி.ராஜேந்திரன், திருவண்ணாமலை.

‘ஹிப்’னாடிஸம் என்கிற புதுவிதமான உளவியல் சிகிச்சையை சமூகத்துக்கு அறிமுகப்படுத்தி பெரும் தொண்டாற்றி இருக்கிறார் டாக்டர் டக்கர் சரோஜாதேவி.
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.