FACEBOOKஇந்தியாவில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை - விஜய் மல்லையா # அட, ரேட்டு கொஞ்சம் முன்ன பின்ன இருக்கும். வாங்கிப் போடுங்க, பின்னாடி உதவும். சல்மான் கானுக்கே கிடைக்குது, உங்களுக்குக் கிடைக்காதா?
- சக்தி சரவணன்

அய்யோ... அம்மா... வாங்குன
300 ரூபாயும் வாட்டர் பாக்கெட்டுக்கே சரியா போயிடும் போலத் தெரியுதே!

@vbss75 
செய்தி: நாளை அக்னி நட்சத்திரம் ஆரம்பம்.                                            
# இப்ப மட்டும் என்ன மௌன ராகமா ஓடிட்டிருக்கு?

அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு இருக்கும்...
# அம்மா இலங்கையில போயி
வாசிக்குமோ!
- தரன் துரை

@YesTN  
இழுத்து பூட்டற வரைக்குமாச்சும் பீரை கூலிங்கா வித்துத் தொலைங்கப்பா டாஸ்மாக்காரங்களே!

 என்னத்த ‘நெருப்புடா’? வழக்கம்போல பூரா சொத்தையும் ஓசியா கொடுத்து ஏமாந்துதான் போகப் போறாரு!
# கபாலி
- சத்திய குமார் எஸ்

@arvinfido  
ஊரு பூரா இவ்ளோ காசு பட்டுவாடா பண்ணுற இந்தம்மா, அதை ஆட்சிக் காலத்துல கொஞ்சம் மக்களுக்கு செலவு பண்ணிருந்தா ஏன் இந்த நெலமை?

அப்பா: என்னடா இது! நீ இட்லி வாங்கிட்டு வருவேன்னு வீட்டுல எல்லாரும் காத்திருக்கோம்... இவ்வளவு நேரம் கழிச்சு வந்து, ரேஷன் கார்டு கொண்டு போனாத்தான் இட்லின்னு சொல்றே?

மகன்: அதை ஏன் கேக்கறீங்க! ‘எதுக்கு 35 இட்லி மொத்தமா வாங்கிட்டு போறே? நிச்சயமா வாக்காளர்களுக்கு கொடுக்கத்தான்’னு சொல்லி பறிமுதல் பண்ணிட்டாங்க! ‘வீட்டுல கரன்ட் இல்லாம மாவாட்டலை... அதனால கடையில எல்லாருக்கும் இட்லி வாங்கிட்டுப் போறேன்’னு சொல்லியும் தேர்தல் அதிகாரி கேட்கலை! ‘தகுந்த ஆவணம் கொண்டு வா’ன்னு சொல்லிட்டாரு. அதான் இட்லிய மீட்டுட்டு வர நம்ம ரேஷன் கார்டை கொண்டு போய் காட்டப் போறேன்!

@chevazhagan1 
அப்ரைசல் சமயத்தில்... ‘‘நீங்கள் இல்லையென்றால் இந்த கம்பெனி நடக்காதா?’’ எனக் கேட்ட மேேனஜரிடம், ‘‘மனிதனே இல்லை என்றாலும் இந்த பூமி சுழலும்’’ என்றேன்!

மேட்ச் ஃபிக்சிங் குற்றச்சாட்டுள்ள சி.எஸ்.கே டீம் இன்னைக்கு ஐ.பி.எல்லயே இல்ல. அந்தளவு நாம விளையாட்ட சீரியஸா பாக்குறோம். ஆனா ஊழல் குற்றச்சாட்டுள்ள அரசியல் கட்சிகள் இன்னைக்கும் தேர்தல் களத்தில் இருக்கு. அந்தளவு நாம அரசியலை விளையாட்டா பாக்குறோம்!
- பூபதி முருகேஷ்

@mujib989898 
மழை வெள்ளத்தில் ஆரம்பித்த பிரச்னை, டாஸ்மாக் தண்ணில தத்தளிக்குது அதிமுக. இதைத்தான் ‘தண்ணில கண்டம்’னு சொல்லுவாங்களோ?

இப்ப மட்டும் ராமர் அனுமாரை சஞ்சீவி மலைய தூக்கிட்டு வரச் சொல்லணும்... சூடு தாங்க முடியாம கீழ போட்டு அவ்ளோ பேர் மண்டையும் சட்னி ஆகியிருக்கும்!
- பிரவீன் தேவராஜ்

@MageshCheyyur 
234 தொகுதிகளிலும் நானே நிற்கிறேன் - ஜெயா
பழனியப்பன் மீது விழுந்த செருப்படி, அவர் மீது விழுந்த செருப்படி அல்ல!

@thoatta 
‘‘250 தொகுதி அ.தி.மு.க.ன்னு போட்டுக்கப்பா...’’
‘‘மொத்தமே 234 தொகுதி தான்!’’‘‘அப்ப அதுவே போட்டுக்கப்பா!’’

இந்தத் தேர்தலில் ஓட்டு போட்டு முடிந்தவுடன் ஒரு மரம் வையுங்க... அஞ்சாவது வருஷம் யாரு அதிக பலன் குடுத்திருக்கானு பாப்போம்... மரமா? மக்கள் பிரதிநிதிகளா?
- அண்ணா சுரேஷ்

ஏற்கனவே மக்கள் அம்மாவை இந்தத் தேர்தலில் வச்சு செய்ய ரெடியா இருக்காங்க... இது தெரியாமல் இன்னும் அம்மா ‘செய்வீர்களா... செய்வீர்களா...’னு கூவிட்டு இருக்காங்க!
# அடுத்த 1996 போல 2016
- இரா.கஸ்தூரி

நீங்கள் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத திட்டம் ‘ஒரு ரூபாய் இட்லி’ திட்டம்  - ஜெயா
திமுக: நாங்கள் சென்னையில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய பல மேம்பாலங்களை கட்டியுள்ளோம்.
அதிமுக: அம்மா உணவகத்தில் சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கு போடுகிறோம்.
திமுக: தமிழ்மொழி செழிக்க ஆசியாவிலேயே மிகப்பெரிய அண்ணா நூலகம், செம்மொழி தமிழாய்வு மையம் கட்டினோம்.
அதிமுக: அம்மா உணவகத்தில் சாம்பார் இட்லி ரூபாய் 1க்கு போடுகிறோம்.
திமுக: புதிய சட்டமன்ற வளாகம் அமைத்தோம், அய்யன் வள்ளுவனுக்கு சிலை எழுப்பினோம், தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைத்தோம்...
அதிமுக: அம்மா உணவகத்தில் சப்பாத்தி குருமா மூன்று ரூபாய்க்கு கிடைக்கச் செய்தோம்.
திமுக: சமச்சீர் கல்வி, மின் உற்பத்தி திட்டங்கள், ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையம், மெட்ரோ ரயில், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் இப்படி பலப்பல...

அதிமுக: யோவ் நிறுத்துங்கய்யா... லெமன் சாதம் அஞ்சு ரூபாய், தயிர் சாதம் அஞ்சு ரூபாய், வெண் பொங்கல் வித் கெட்டி சட்டினி அஞ்சு ரூபாய்!

@Im_viniz 
முதல் 4 மாசத்துல பஸ் கட்டணம் உயர்வு; அடுத்த 4 மாசத்துல மின் கட்டண உயர்வு. அப்படியே மணல், சிமென்ட்னு கடைசியா நல்லா பால் ஊத்துனாங்க!

அந்த அம்மா ‘‘என் ஆட்சியில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது’’னு போன்ல எங்கிட்ட சொல்லிக்கொண்டு இருக்கும்பொழுதே எங்க வீட்டு மின்விசிறி நின்னுடுச்சி. பவர் கட்! போன்ல பிரசாரம் செய்யும்பொழுது அவங்களால பாக்க முடியாது இல்லன்னு நானே சொல்லி ஒரு வழியா மனச தேத்திக்கிட்டேன்...
‪- கிறிஸ்டில்டா என்
பாண்டியன்

நடிகர் கார்த்திக்கின் விடியல் கூட்டணியில் மீண்டும் பிளவு
# ஒரு உடைச்ச கடலைய எத்தனை தடவைடா உடைப்பீங்க?
- நிக்கோலஸ் கோபர்நிக்கஸ்

@maanniiiiiii
மொட்ட மாடில பெரிய கண்ணாடிய வச்சு சூரியனுக்கே வெயில திருப்பி அனுப்பிடலாம்னு இருக்கேன்!

@nithya_shre 
அம்மா திரையரங்கு திறப்போம்னு சொன்னாங்க... ஆனா அம்மா பேர்லயே வாங்கித் திறப்போம்னு சொல்லல!
# சொல்லாததை செய்தோம்...

@writerpara 
மெனு கார்டில் இருப்பதில்லை, ஆர்டர் செய்வதும் இல்லை. ஆனாலும் பில்லில் எப்படியோ வந்துவிடுகின்றன VATம் சர்வீஸ் டாக்ஸும்.

மல்லையாவின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டது - செய்தி
‪#‎ அப்படியே‬ அந்தாளோட ரேஷன் கார்டையும் முடக்கிடுங்க ஆபீசர்ஸ். அரிசி, மண்ணெண்ணெய் எல்லாம் வாங்க முடியாம சாவட்டும்!
- தேவி சண்முகம்

@thoatta 
இரக்கமில்லாத வெயில். இந்த வெயில்ல டென் மினிட்ஸ் நின்னா தமன்னா, டாப்ஸிகூட டார்க் ஆயிடுவாங்க!