பிகாசோ ஓவியம்!



சிறுபான்மையினருக்கு எதிரான மனநிலை கொண்டவர்தான் ஜெயலலிதா என்பது கடந்த காலங்கள் உணர்த்திய பாடம். ஜெயலலிதாவிடம் இஸ்லாமியர்கள் எப்போது கோரிக்கை வைத்தாலும் அது நிறைவேறியதில்லை. இட ஒதுக்கீட்டை ஆய்வு செய்ய ஒரு சிறிய குழுவைக் கூட அவர் அமைக்க முயற்சிக்கவில்லை என்பதே உண்மை!
- முகம்மது யூசுப், திண்டுக்கல்.

பிங்க் காஸ்ட்யூமில் பிகாசோ ஓவியமாக ஜொலித்தது காஜல் அகர்வாலின் அட்டைப் படம்.
- ரமேஷ்குமார், தென்காசி.

இந்தியாவிலேயே மிக அதிகமாக பணம் ஒரே ஒரு பண்ணை வீட்டில் பறிமுதல் செய்யப்பட்டது. அது, ஓட்டுக்கு கொடுப்பதற்கான பணம் என்பதற்கு எல்லா ஆதாரங்களும் இருக்கின்றன. அது குற்றமாகக் கருதப்பட்டு எந்தத் தண்டனையும் இதுவரை தரப்படாதது வருத்தமே! தேர்தல் ஆணையம் யாருக்காக இயங்குகிறது?
- குமரேசன், விருதுநகர்.

‘சம்மரில் பீச்சுக்கு போகலாமா, மொட்டை மாடியில் தூங்கலாமா’ என்று நாங்க  தவித்துக் கொண்டிருக்கையில், ‘ஸ்டார்கள் எங்கே போறாங்க’ என்று போட்டு  கடுப்பேத்தாதீங்க ப்ரோ!
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

பிளாக் மேக்கப் போட்டு கறுப்பு வெறுப்புக்கு எதிராக தன் எதிர்ப்பைக் காட்டிய ஜெயாவிற்கு ஒரு கூடை பூங்கொத்து. சமூக வன்முறை வலுப்பட்டிக்கும் இந்தியாவில் இதுபோன்ற மாற்றங்கள் வரவேண்டும்;
பரவவேண்டும்.
- எம். பர்வீன் பாத்திமா, திண்டுக்கல்.

அ.தி.மு.க.வின் 60 ஆயிரம் கோடி ஊழலைப் பேசும் ஆவணப்படத்தை தமிழ்நாடு மின்துறை பொறியாளர்கள் அமைப்பைச் சேர்ந்தவர்களே ஒன்று கூடி உருவாக்கியிருப்பது வியக்க வைத்தது.
- டி.வி.இளங்கோவன், மதுரை.

கோயில்களில் தேங்காய் நீரை வீணாக்கக் கூடாது என்ற சென்னை பெசன்ட் நகர் சீனியர் சிட்டிசன்களின் வாதம் ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான். ஆனால், அதைச் செயலாக்க முற்படும்போது நடைமுறைச் சிக்கல்கள் நிறைய வரலாம்!
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

‘வலைப்பேச்சு’ அத்தனையும் அட்டகாசம். ‘வளமான, அமைதியான, எழுச்சியான தமிழகத்தை உருவாக்கி
யிருக்கிறேன்’ என ஜெயலலிதா சொன்னதற்கு... ‘அப்படியே அது எங்க இருக்குதுன்னும் சொல்லிடுங்கம்மா’ என்ற பன்ச் செம டைமிங் சிந்தனை!
- எஸ்.கணேஷ்குமார், வேலூர்.

வசந்தபாலனின் ‘டவுன்லோடு மனசு’ அருமை. ‘‘நேர்மையாக ஒரு விஷயத்திற்குப் போராடினால் அது கிடைக்கும். போலித்தனமாகவோ, ஜிகினாவாகவோ இல்லாமல் சினிமாவில் இருந்தால் கண்டிப்பாக அந்த வெற்றி உண்டு’’ என வசந்தபாலன் சொல்லியிருப்பது தன்னம்பிக்கை ஊற்று!
- மகிழை.சிவகார்த்தி, சென்னை-41.