jokes



‘‘கட்சியில சேர யாருமே மிஸ்டு கால் கொடுக்காதது தலைவர் மனசை ரொம்பவே பாதிச்சிடுச்சுன்னு எப்படிச் சொல்றே..?’’
‘‘தனக்கு வர்ற வழக்கமான கால்களைக் கூட மிஸ்டு காலாக விட்டுட்டு, அப்புறம் அவரே கூப்பிட்டுப் பேசுறாரே!’’



‘‘யோவ்! என்னய்யா இது...
நீ என்கிட்ட சொன்ன கதைக்கும், எடுத்திருக்கிற படத்தோட கதைக்கும் சம்பந்தமே இல்லாம இருக்கு?’’
‘‘சாரி சார்... சின்னதா ஒரு தப்பு நடந்து போச்சு! டி.வி.டி. மாறிடுச்சு...’’"

‘‘க்ரைம் படம் எடுக்கப் போறதா சொல்லி டைரக்டர் ஒருத்தர் உங்களைப் பார்க்க வந்துருக்கார் தலைவரே...’’
‘‘அதுக்கு என்னை எதுக்குய்யா பார்க்கணும்?’’
‘‘உங்களுக்கு இதுவரை வந்துருக்கிற குற்றப் பத்திரிகைகள்ல த்ரில்லிங்கான ஒண்ணைக் குடுத்தீங்கன்னா அதை வச்சி கதை
எழுதிடுவாராம்...’’

‘‘தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்து இருக்கக்கூடாதுன்னு ஏன் சொல்றே..?’’
‘‘இப்பல்லாம் அவர் எழுதித் தர்ற அறிக்கைகளை மெடிக்கல் ஸ்டோர்காரங்களை வச்சுதான் படிக்கவே முடியுது...’’

- கே.லக்ஷ்மணன்,
திருநெல்வேலி.