ஆளைத் தூக்குதே!



கபாலி பொம்மை, கபாலி கஃபே என வீக் எண்ட் கொண்டாட்டத்துக்கு ஸ்பெஷல் ட்ரீட் குங்குமம்தான்!
- எம்.சிவமூர்த்தி,  சென்னை-4



நவீன உலகின் சக்திமானாக வளரும் போகேமான் குறித்த சாதக பாதகங்களை விளக்கிய கட்டுரை, ட்ரெண்டிங் அப்டேட்!
- எம்.ஹேமா சிவனேஷ், திருவள்ளூர்.

ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல வேட்கையோடு உழைக்கும் ஆரோக்கிய ராஜிவ், தருண் ஆகியோருக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்! இவர்கள் தமிழகத்துக்குப் பெருமை சேர்க்கட்டும்!
- பி.சின்னமயில், தஞ்சாவூர்.

காலேஜ் ஃபேஷனின் பலஸ்ஸோவேர் உடை, செம கிளாமர் ஷோவுக்கு கேரன்டி!
- பி.எல்.கோகுலகிருஷ்ணன், திருநெல்வேலி.

ஸ்டார்களின் ஒரு கேள்வி ஒரு பதில் ஷார்ட் அண்ட் ஸ்வீட்! குறிப்பாக, பூனம் பாஜ்வாவின் பிளாக் அண்ட் பியூட்டி படத்தில் திமிறுகிறதே கொள்ளை அழகு!
- டி.லட்சுமி சிவா, வேலூர்.

பள்ளிக் குழந்தைகளுக்கு சிறுதானிய ஸ்நாக்ஸ்... அடடா! நம்பிக்கை விதைக்கும் விஜய்ராஜின் இன்னோவேட்டிவ் ஐடியா பலே!
- எச்.இதயத்துல்லா, திருவண்ணாமலை.

ஃபைட்டுக்கே தனி ஸ்கிரிப்டா? வீடியோ ஆல்ப இயக்குநர் ரதீந்திரன் வியக்க வைக்கிறார். உங்க படத்துக்கு வீ ஆர் வெயிட்டிங் சார்!
- மு.ஜகத் நாராயணன், சென்னை-33.

பால்கோவா அழகி காஜல் தமிழை பேசத்தான் வேண்டுமா என்ன! அவரின் வனப்புதான் பேசாமலேயே ஆளைத் தூக்குதே!
- கே.அறிவழகன், திண்டுக்கல்.

அறியாது வந்த நோயால் துவண்ட மக்கள், இனி மருந்தைப் பெறவும் துடிக்க வேண்டுமா? எய்ட்ஸ் மருந்து தட்டுப்பாட்டில் அரசு கவனம் செலுத்த வேண்டியது அவசியம், அவசரம்.
- சு.குமரேசன், திருப்பூர்.

ஹரித்வாரில் வள்ளுவர் சிலை தவிக்க, திருப்பூரில் மலையில் வள்ளுவர் காலம் கடந்து வாழப்போகிறார் என்பது அற்புதம். ரவிக்குமாரின் அர்ப்பணிப்பு அரியது!
- இரா.முருகானந்தம், ஈரோடு.

சமுத்திரக்கனியின் Download மனசு பகிர்வு நெகிழச் செய்தது. இறக்கி வைத்ததில் அவரின் மன பாரம் குறைந்திருக்கலாம். எங்களுக்கு மனசு கனத்துவிட்டது.
- ஆர்.அசோகன், வேலூர்.