தாமதம்



‘‘சுவாமிநாதன்... சுவாமிநாதன்... சுவாமிநாதன்’’ என்று டவாலி மூன்றாவது முறையாக பெயரை அழைத்ததும் கூண்டுக்குள் ஏறி நின்றார் அந்த  மனிதர். நீதிபதியைப் பார்த்து பணிவாக வணக்கம் செய்தார். அவரை மேலோட்டமாக ஒரு பார்வை பார்த்த நீதிபதி, பின் அவரது  வக்கீலிடம் திரும்பி, ‘‘எதற்காக இந்த வழக்கு?’’ என்று கேட்டார். ‘‘மை லார்ட்! இவர் அரசு ஊழியர். அலுவலகத்துக்கு தாமதமாகப்  போனதால் வேலையிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார்’’ என்று எடுத்துரைத்தார் வக்கீல்.

கோபமும் கண்டிப்புமாக சுவாமிநாதனை உற்றுப் பார்த்த நீதிபதி, ‘‘ஒருவரின் தாமதத்தால் எத்தனை பேர் பாதிக்கப்படுகிறார்கள் என்பது  உங்களுக்குத் தெரியுமா?’’ என்றார். ‘‘தெரியும்’’ என்றார் சுவாமிநாதன் பவ்யமான குரலில். தலைகுனிந்தவாறு நின்ற அவரை மேலும் கீழுமாகப்  பார்த்த நீதிபதி, ‘‘உங்கள் வயது என்ன?’’ என்றார்.

‘‘54 வயது’’ என்றார் அவர். உடனே கோப்புகளை முன்னும் பின்னுமாகத் திருப்பிப் பார்த்த நீதிபதி, ‘‘என்ன இது? இந்த கேஸ் கட்டுல 36  வயசுன்னு இருக்கே!’’ என்றார் ஆச்சரியமாக. ‘‘அது வழக்கு தொடர்ந்தப்ப என்னோட வயசு, மை லார்ட்!’’ என்றார் சுவாமிநாதன். இப்போது  நீதிமன்றமே அமைதியானது.                                 

-அஜித்