பாஸ்போர்ட் இல்லாமல் ஃபாரீன் ட்ரிப்!



ஜூலை மாதத்தின் இரண்டாவது வாரம் முழுக்க தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகைகள், வார இதழ், சமூக வலைத் தளங்கள், ரயில் நிலையம், பேருந்து நிலையம், பயணிகள் நிழற்குடை, சாலை நெடுகிலும் பதாகைகள், என சென்னை முதல் கன்னியாகுமரி வரையில் மீம் கிரியேட்டர்களையும் சேர்த்து ஒட்டு மொத்த தமிழகத்தையே ஆக்கிரமித்துக் கொண்ட மூன்று சொல் விளம்பரம்தான் ‘பாஸ்போர்ட் இல்லாம ஃபாரீனா..?’’

இந்த ஐடியாவை உருவாக்கி விளம்பரத்தை தயாரித்து வெளியிட்ட கே.வி.கதிரவன் - வினிஷா விஷன் விளம்பர நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரை தொடர்பு கொண்டோம்.‘‘இந்த விளம்பரத்தின் இலக்கு ‘உதயம்’ பருப்பு வாங்குகின்ற வாடிக்கையாளர்களுக்கு மகத்தான சலுகைகளையும், பரிசுகளையும் அள்ளிக் கொடுப்பதே.  

நம் இந்திய கலாசாரத்தில் சிறப்பு வாய்ந்ததாகவும், எப்பொழுதுமே மக்களை ஈர்க்கும் விதமாகவும் உள்ளதால் தங்க நாணயம் பரிசையும், இப்போதுள்ள டெக்னாலஜி உலகுக்கு ஏற்ப இளைஞர்களுக்கு ஐபோன் பரிசும் வழங்க திட்டமிட்டுள்ளோம். இந்தப் போட்டியில் இந்தத் தலைமுறையினர் கலந்துகொள்ள ஏதுவாக இணையதள வசதியும், இதற்கு முந்தைய தலைமுறையினர் கலந்துகொள்ள வசதியாக எஸ்.எம்.எஸ் மற்றும் தபால் முறையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர 20,000 பேருக்கு மேல் நிச்சயப் பரிசுகளை அள்ளித்தரவிருக்கிறோம். ஒரு கிலோ ‘உதயம்’ பருப்பு பாக்கெட்டினுள் உள்ள 12 இலக்க எண்ணோடு சூப்பர் ஸ்லோகன் எழுதி நூறு நாள் பிரம்மாண்ட பரிசுப் போட்டியில் தமிழகம் முழுக்க வெற்றி பெறும் அதிர்ஷ்டசாலிகளின் பெயர்ப் பட்டியல் வாரத்துக்கு ஒருமுறை www.udhaiyamdhall.com என்ற இணையதளத்தில் ஒளிவுமறைவின்றி நேரடியாக அறிவிக்கப்படும்...’’ என்கிறார் கே.வி.கதிரவன்.