தல தைரியத்தில் மல!



Untitled Document



ரஜினியின் 'ராணா' டேக் ஆஃப் வாசித்தபோது அதிர்வு ஆரம்பமாவதை உணர முடிந்தது. இப்போதே வாசகர்களுக்கு ரஜினி காய்ச்சலை வரவழைத்து விட்டீர்களே!
- பூ.திலகவதி, சிதம்பரம்.


'வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்கலாம்' பகுதியில் ஜூஸ் தயாரிப்பது எப்படி என்பதை அருமையாக விளக்கி, அடிக்கும் கோடை வெயிலுக்கு எங்களை 'கூலா' ஆக்கிட்டீங்க!
- டி.வந்தனா கோபால், புதுச்சேரி.


 
சிவகுமார் வீட்டு சின்ன மருமகளின் பெயர், போட்டோ மற்றும் விவரங்களை முந்தித் தந்த உமக்கு ஒரு 'ஓ' போடுகிறோம்!
 
- ஸ்ரீதேவிராஜன், திருவிடைமருதூர்.


'கறுப்பு தேவதைகள்' ரொம்பவே யோசிக்க வைத்து விட்டார்கள் 'காற்றின் கையெழுத்து' வாயிலாக.
- மயிலை கோபி, சென்னை 83.


நடமாடும் தெய்வமாக விளங்கிய பகவான் ஸ்ரீசத்ய சாயிபாபா 'மக்கள் தொண்டே மகேசன் தொண்டு' என்று ஆற்றி பக்தர்களை அளவில்லா துக்கத்தில் விட்டுச் சென்றவர். உலகம் உள்ளளவும் அவர் நாமம் பேசப்படும் என்பது வெள்ளிடை மலை.
- ஆர்.கே.லிங்கேசன்,
    மேலகிருஷ்ணன்புதூர்.



சிகர் மன்றங்களே வேண்டாமென கலைத்தது அசட்டுத் துணிச்சலா? விபரீத விளையாட்டா? தல எதிலுமே மல!
 
-  அ.யாழினி பர்வதம், சென்னை 78.


'கோ' விமர்சனம் 'கோ'டை மழையாக மகிழ்ச்சி கூட்டியது.
- மீ.மகாநந்தனி, திருவண்ணாமலை..


'ஒரு எஸ்பியின் டைரி' பகுதியில் கொலையானவனே கொலைகாரனா? 'தடக்... தடக்...' என்று மனசு அடித்துக் கொண்டது.
- ஜி.ஸ்டீபன் சார்லஸ், சிவகங்கை. ்.


சென்ற வாரம் பிரபுதேவாவுக்கு ஹன்சிகா ஊட்டிய ஹாட்கேக், இந்த வாரம் ஹன்சிகாவை உப்பு மூட்டை தூக்கிய ஜெயம் ரவி. அடுத்த வாரம் ஹன்சிகா அந்தப் படத்தில் கொடுத்த முத்தம் பற்றிய செய்திதானே?
 
- ஆர்.தனபால், சென்னை&63.


நிதர்ஸனாவின் 'சுட்ட கதை சுடாத நீதி' பொழுதுபோக்கு கதை போலவே தெரியவில்லை. சொல்லப்படும் விஷயங்களும், கடைசியில் சொல்லப்படும் நீதியும் நச்!
 
- வ.பத்மா, ஸ்ரீரங்கம்்.


'தூது' எனப்படுவது அருமை. தூது செல்வது இப்போது எவ்வாறு வளர்ந்து விட்டது என நினைக்கும்போது மனம் பிரமிக்கிறது.
- டி.வெங்கடேஷ் பாபு, கோவை..