ஏரியா லிட்ரேச்சர்



உறவு நெருங்குது... உலகம் சுருங்குது..!

தம்மாத்துண்டு
மேட்டரு
இன்னா
ஷோக்கா கீது
எல்லா சேட்டையும்
பண்ணுது
அதுக்கு பேரு
செல்போனு...

மீனாட்சி மிஸ்டு
கால் கொடுக்குது
காமாட்சி
எஸ்.எம்.எஸ். அனுப்புது
சுப்பம்மா
ராவுலே பேசுது
கொடுத்து
வெச்சவண்டா நானு...

மார்க்கெட்டுலே
சரக்கு கீதா
போனுலே
கேட்கலாம்
தியேட்டருலே
ஹவுஸ்புல்லா
மெசேஜ் அனுப்பி
தெரிஞ்சிக்கலாம்!

ஊர்லே கீற ஆயாகிட்ட
தெனம் தெனம்
பேசலாம்
உறவு நெருங்குது
உலகம் சுருங்குது
இதுக்குதாண்டா
செல்போனு..!

சீத்தலைப் பாட்டனார்