விண்வெளி ஹோட்டல்!



சுவிட்சர்லாந்து, பாலித் தீவுகளுக்குச் சுற்றுலா போகிற மாதிரி விண்வெளிக்கும் போக வேண்டும். அங்கு எப்படியான அனுபவம் கிடைக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும் என்பதே பலரது கனவு.

இந்நிலையில் விண்வெளிக்கு மக்களை அழைத்துச் செல்வதற்கான திட்டத்தில் பெரு நிறுவனங்கள் தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கின்றன. இன்னொரு பக்கம் விண்வெளிக்கு வருகிறவர்களை உபசரித்து தங்கவைப்பதற்கான ஹோட்டல்களை அமைக்கும் நோக்கத்திலும் சில நிறுவனங்கள் தீவிரம் காட்டுகின்றன.இப்படியான ஒரு சம்பவம்தான் இது.

கலிபோர்னியாவைச் சேர்ந்த ‘தி கேட்வே ஃபவுண்டேஷன்’ என்கிற நிறுவனம் ‘வொன் பாருன் ஸ்டேஷன்’ என்ற பெயரில் விண்வெளி ஹோட்டலை அமைக்க திட்டமிட்டுள்ளது.கப்பல் வடிவில் நட்சத்திரங்களுக்கு நடுவில் விண்வெளியில் மிதக்கும் விதமாக இந்த ஹோட்டல் வடிவமைக்கப்படவுள்ளது.

2025-ம்ஆண்டுக்குள் இந்த ஹோட்டலை பூமியில் கட்டி முடித்து 2027ல் விண்வெளிக்கு எடுத்துச் செல்வார்கள். இதற்கு முன் அமெரிக்காவைச் சேர்ந்த ‘ஓரியன் ஸ்பேன்’ என்கிற நிறுவனம் 2022க்குள் ‘அவுரா ஸ்டேஷன்’ என்ற விண்வெளி ஹோட்டலைக் கட்டமைக்க திட்டமிட்டுள்ளது.

த.சக்திவேல்