பொம்மி பேக்கரியின் பன்!இதுக்கு முன்னாடி எவ்வளவோ தீபாவளி யைக் கொண்டாடியிருக்கோம். அது எல்லாமே சிம்பிளா, நார்மலா இருந்திருக்கு. ஆனா, இது ‘சூரரைப் போற்று’ தீபாவளி! எதிர்பார்க்கவேயில்ல... கிராண்ட் ட்ரீட்!தீபாவளி அன்னிக்கி அவ்வளவு பாராட்டுகள்... வாழ்த்துகள். எல்லாருக்குமே ‘பொம்மி பேக்கரி’ பிடிச்சுப் போச்சு. படத்துல என் கேரக்டர் பெயர் சுந்தரி. ஆனா, ‘பொம்மி’னுதான் இப்ப என்னைக் கூப்பிடறாங்க! என் வாழ்க்கைல மறக்கமுடியாத தீபாவளி இது. சூர்யா சாருக்கும் சுதா மேமுக்கும் பெரிய பெரிய தேங்க்ஸ்!’’ நெகிழ்கிறார் அபர்ணா பாலமுரளி.

‘சூரரைப்  போற்று’வில் நீங்க எப்படி?
‘இறுதிச்சுற்று’ பார்த்ததுல இருந்து இயக்குநர் சுதா கொங்கரா மேமின் ரசிகையாகிட்டேன். அவங்க படத்துல நடிக்கணும்னு கனவு கண்டேன். சூர்யா சார் நடிக்கும் இந்தப் படத்தின் ஆடிஷனுக்கு போனேன். செலக்ட் ஆனேன். இதுக்கு முன்னாடி மலையாளத்துல பத்து படங்களுக்கு மேல பண்ணிருக்கேன். தமிழ்ல இது எனக்கு மூணாவது படம். ‘8 தோட்டாக்கள்’, ‘சர்வம் தாளமயம்’க்குப் பிறகு ‘சூரரைப் போற்று’ல நடிச்சிருக்கேன்.

இந்தப் படத்துக்காக நடந்த ப்ரீ ஒர்க் இருக்கே... அப்பப்பா... இயக்குநரோட டெடிகேஷனை கண்கூடா பார்த்தேன். இந்த பொம்மி, மதுரைப் பொண்ணு. அதனால மதுரைத் தமிழ்ல பேச பயிற்சி கொடுத்தாங்க. மேனரிசம், பாடி லேங்குவேஜ்னு பெண்டு நிமித்திட்டாங்க!படத்துல நடிச்ச எல்லா கேரக்டர்ஸுக்குமே முழு ஸ்கிரிப்ட்டும் தெரியும். எல்லாரையும் உட்கார வைச்சு ஸ்கிரிப்ட் ரீடிங் பண்ணினாங்க.

சுதா மேம் டைரக்‌ஷனைப் பார்த்து மிரண்டுட்டேன். பக்கா ப்ளானிங். ஒரு நிமிஷம் கூட ஸ்பாட்ல வேஸ்ட் பண்ணலை. அமேஸிங் எக்ஸ்பீரியன்ஸ்...’’ புன்னகைக்கிறார் அபர்ணா.ஆர்க்கிடெக்‌சர் படிச்ச பொண்ணு... ஆக்ட்டிங்ல எப்படி?

மிராக்கிள். கேரள மாநிலம் திருச்சூர்ல பொறந்து வளர்ந்தேன். அப்புறம் கோவை, கத்தார்னு எங்க ஃபேமிலி ட்ராவல் ஆச்சு. மறுபடி யும் கேரளா வந்தோம். அப்பா, பாலமுரளி இசையமைப்பாளர். அம்மா, வழக்கறிஞர். மலையாளத்துல சில படங்கள்ல பின்னணியும் பாடியிருக்காங்க. நான் ஆர்க்கிடெக்சர் படிச்சிருந்தாலும், கிளாசிகல் டான்ஸ்ல ஆர்வம் அதிகம். பரதம், மோகினியாட்டம், குச்சுப்புடி தெரியும். ஆக்ட்டிங்ல இன்ட்ரஸ்ட் இருந்ததில்ல. பகத் ஃபாசிலோட ‘மகேஷின்டே பிரதிகாரம்’ல நடிச்ச பிறகுதான் நடிப்பு மேல ஒரு பிடிப்பு ஏற்பட்டுச்சு.

தொடர்ந்து வினீத் சீனிவாசன் சார் படங்கள் அமைஞ்சது. தமிழ்ல ‘8 தோட்டாக்கள்’ல அறிமுகமானேன். இப்ப பொம்மிக்கு நல்ல பெயர் கிடைச்சதால, இனி வரும் படங்கள்ல வெயிட்டான நல்ல ரோல்கள் எதிர்பார்க்கறேன். பர்ஃபாமரா பெயர் வாங்க விரும்பறேன்.

என்ன சொல்றார் சூர்யா?

வெரி ஹம்பிள். மதிப்பும் மரியாதையுமாக பழகினார். ரொம்ப கம்ஃபர்டபிளா உணர்ந்தேன். சூர்யா சார் நடிப்பு அவ்ளோ பிடிக்கும். அவரோட ‘வாரணம் ஆயிரம்’, ‘பிதாமகன்’ எல்லாம் என் ஆல் டைம் ஃபேவரைட். இந்தப் படத்துல அவரோட டெடிகேஷனை நேர்ல பார்த்தேன். ராட்சஷர்! சின்ன க்ளோஸப் ஷாட்டுக்குக்கூட முழு டயலாக்கையும் பேசி, நடிச்சு அதுக்கான ஃபீலைக் கொண்டு வர்றார்!  சுந்தரிக்கு ‘பொம்மி பேக்கரி’ வைக்க ஆசை... அபர்ணாவுக்கு..?

நிறைய இருக்கு. ஆனா, அதுக்கான ஸ்டெப்ஸ் எதுவும் இப்ப எடுத்து வைக்கல. சின்ன வயசுல கர்னாடிக் மியூசிக், கிளாசிகல் டான்ஸ் கத்துக்கிட்டேன்.
படிச்சது ஆர்க்கிடெக்சர். ஸோ, எல்லா தளங்களிலும் பெயர் எடுக்கணும். எல்லாத்திலும் சிக்ஸர் அடிக்கணும்னு ஆசை இருக்கு.

படிப்பை இப்பதான் முடிச்சேன். பாடகியாக எந்த முயற்சியும் இதுவரை எடுக்கல. அதுக்கான ஒர்க்கை கவனிக்கணும். தமிழ் இண்டஸ்ட்ரீயும், சென்னையும் ரொம்ப பிடிச்சிருக்கு. இதுவும் எனக்கு இன்னொரு ஹோம்தான்!

மை.பாரதிராஜா