யூனா



திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார்

சென்ற இதழ் தொடர்ச்சி...

‘‘யூனா... ஒரு சந்தேகம் கேட்கலாமா?’’
‘‘தாஷூனேரு!’’
‘‘என்னது?’’
‘‘கேளுன்னு சொன்னேன்...’’

‘‘ஓ... உன்னோட மொழியா? ரைட்டு. இப்ப எதுக்கு உன்னோட உடம்பை எரிக்கணும்னு ஆசைப்படற? வயசும் இருபதுதான் ஆகுது. சாகிற வயசா இது? வெளியில இந்த விஷயம் தெரிஞ்சா... உன்னை சூசைட் அட்டம்ப்ட், என்னை மர்டர் அட்டம்ப்ட் கேஸ்ல புக் பண்ணீடு வாங்க. கொஞ்சநாள் வாழலாமே?’’‘‘இல்லை தாஸ். எனக்கு இந்த உலகத்துல யாருமே இல்லை.

இனி இந்த உலகத்துல வாழ்றதுக்கு எனக்கு இஷ்டமும் இல்ல. என் மேல உயிரையே வெச்சிருந்த அப்பா, சாகாவரம் கொடுத்துட்டு செத்துப் போயிட்டாரு. சொந்தக்காரங்க எல்லாம், நாகசாகி அணுகுண்டு சம்பவத்தில இறந்துபோயிட்டாங்க. இந்த உலகம் எனக்கு பிடிக்கலை. இந்த உலகத்தை விட்டுப் போறதுதான் என் விருப்பம். உடம்பு கெடாம இருக்கிறவரைக்கும் என் உயிரிருக்கும்.

அழிவில்லை. உடம்பை எரிச்சு அழிச்சிட்டா, என்னோட உயிரும் அழிஞ்சிடும்...’’
‘‘நீ அழிஞ்சிட்டா, உன்னோட அறிவும் சேர்ந்து அழிஞ்சிடும் யூனா...’’‘‘பரவாயில்லை. என் நாட்டுல இன்னும் ஆயிரம், ஆயிரம் இளம் சாதனையாளர்கள் இருக்காங்க. அவங்க, இந்த மனிதகுலத்துக்காக நல்ல விஷயங்களைக் கண்டுபுடிச்சுக்கிட்டே இருப்பாங்க.’’‘‘அதெப்பிடி உங்க நாட்டுல இவ்ளோ டேலன்ட்?’’‘‘அதுக்கு காரணம், நாங்க எங்க தாய்மொழியில பாடம் படிக்கிறோம் தாஸ். தாய்மொழியில படிக்கிறவங்க மூளை ரொம்ப ஷார்ப்பா இருக்கும்னு உனக்குத் தெரியாதா?’’
‘‘தெரியும். அப்ப நீங்கல்லாம்
இங்கிலீஷ் படிக்க மாட்
டீங்களா?’’

‘‘இங்கிலீஷ் தெரியாது போடா...’’
‘‘அட! இப்ப உள்ள டிரெண்டிங் கூட தெரிஞ்சு வெச்சிருக்க. சரி. எனக்கு இவ்ளோ பெரிய உதவி பண்ணுற. ஆனா, நீ எப்படி இருப்ப, உன்னோட முகம் எப்படி இருக்கும்னு கூடத் தெரியாதே யூனா?’’‘‘ம்ம்ம்... ஓரளவுக்கு பரவாயில்லாம இருப்பேன்னுதான் நெனைக்கிறேன். சின்னதா... சதுர முகம். அப்றம்...’’‘‘ஜப்பான் முகமெல்லாம் எனக்கு கற்பனை பண்ணமுடியாது. இப்ப இருக்கிற சினிமா நடிகைகள்ல நீ யார் மாதிரி இருப்ப?’’
‘‘சினிமா...? ம்ம்ம்... ஹிகாரி மிட்சுஷிமா மாதிரி...’’

‘‘ஹிகாரியா...? அது யாரு?’’
‘‘எங்க ஊரு நடிகைப்பா...’’
‘‘அவங்களை எப்படி எனக்குத் தெரியும்?’’
‘‘கூகுள்ல அடிச்சுப் பாரு.

தெரியும்...’’
அடித்துப் பார்த்தேன். ‘‘அழகு தான் யூனா. உன்னை எரிக்கிறதில எனக்கு இஷ்டமே இல்லை. ஒரு அஞ்சு வருஷம் வாழ்ந்துதான் பாரேன். பிடிக்கலைனா அப்புறம் நானே, நான் தயாரிச்ச பெட்ரோலை ஊத்தி உன்னை எரிக்கிறேன்...’’சின்னதாய் சிரிப்பு அவளிட மிருந்து வந்தது. கார் நின்றது. ‘‘இறங்கு.’’இறங்கி நடந்தோம். ஒரு மரத்தடியைக் காட்டினாள். ‘‘இங்க தோண்டுவோம். உனக்குத் தேவையான பெட்டி இருக்கும்...’’
இருவரும் மண்வெட்டி, கடப்பாரை கொண்டு தோண்டினோம். கடற்கரை மணல் என்பதால் தோண்டுவது சுலபமாக இருந்தது. 40 நிமிடங்களுக்குப் பிறகு ‘டொப்....’ என்று சத்தம் கேட்க, நானும் யூனாவும் கைகுலுக்கிக் கொண்டோம். ரகசிய எண் போட்டு பெட்டியைத் திறந்து டார்ச் அடித்தேன். கட்டுக்கட்டாய் பணம் + தங்கம்.

‘‘யூனா.... ஜப்பான் தேவதையே... நன்றி!’’
‘‘போதும். போதும். உணர்ச்சிவசப்படாம, பெட்டியைக் கொண்டு போய் பத்திரமா கார்ல வெச்சிட்டு வா. பக்கத்துலதான் என் உடம்பை புதைச்சு வெச்சிருக்காங்க. அதையும் தோண்டணும்...’’பெட்டியை காரில் வைத்துவிட்டு நடந்தோம்.‘‘இந்தா... இந்த இடம்தான் தாஸ். இங்கதான் என் உடம்பை புதைச்சு வெச்சிருக்காங்க...’’ யூனாவின் குரல் லேசாக தழுதழுப்பதை உணர முடிந்தது. கண்ணுக்குத் தெரிகிற மாதிரி இருந்தாலாவது கட்டிப்பிடித்து
ஆறுதல் சொல்லலாம்.

மண்வெட்டியும், கடப்பாரையும் மாறி, மாறி மண்ணுக்குள் இறங்க... சரியாக 40வது நிமிடம்... அந்த மரப்பேழை தெரிந்தது. வெளியே எடுத்தோம். பக்கத்தில் யூனாவிடம் இருந்து எந்தச் சத்தமும் இல்லை. யெஸ். 1920ம் ஆண்டுகளில் பிறந்து... நூறு வருடங்களைக் கடந்து,  இப்போதும் 20
வயதில் இருக்கும் யூனாவின் வாழ்க்கை இன்னும் சில நிமிடங்களில் முடியப்போகிறது. எனக்கே மனது கஷ்டமாக இருக்கும் போது, அவளுக்கு எவ்வளவு வேதனையாக இருக்கும்?

கொண்டு வந்திருந்த பெட்ரோல் கேன்களைத் திறந்து மரப்பெட்டியின் மீது ஊற்றி னோம். இன்னும் ஒரே ஒரு வேலை மட்டுமே பாக்கி. பாக்கெட்டில் இருந்து தீப்பெட்டி எடுத்தேன்.
‘‘யூனா...’’
அவளிடம் இருந்து பேச்சு இல்லை.
‘‘யூனா ப்ளீஸ்...’’
‘‘சொல்லு தாஸ்...’’

‘‘உன்னோட குரலை மட்டும்தான் கேட்டுக்கிட்டிருக்கேன். ஒரு தடவை... ஒரே தடவை பெட்டியைத் திறந்து உன் முகத்தைப் பார்த்துக்கிறேனே..?’’
சில வினாடிகள் அமைதிக்குப் பிறகு ‘‘ம்...’’ என்றாள் ஒற்றை வார்த்தையாய்.

சுத்தியலால் தட்டி, பெட்டியின் மூடியைத் திறந்து, மெது... மெதுவாக விலக்கினேன். உள்ளே அவள் இருந்தாள். குரலால் மட்டுமே எனக்கு அறிமுகமாகி இருந்த அவள்... புத்தம் புதிதாய், பொலிவாய், துளி சேதமில்லாமல் பெட்டிக்குள் இருந்தாள். நான் கூகுளில் பார்த்த நடிகையை விடவும் அழகான ஜப்பானிய முகம். மேட் இன் ஜப்பான் என்பது முகத்தில் தெரிந்தது. பார்த்துக் கொண்டிருந்தவன், அந்த அழகிய முகத்தில் திடீரென ஏற்பட்ட மாறுதல் கண்டு திகைத்துப் போனேன்.

அவள் முகத்தில் சின்னச் சின்னதாய் அசைவுகள். கண்கள் லேசாகத் திறந்தன. நூறாண்டுகளாகச் சேர்ந்திருந்த உதடுகள், சிரமப்பட்டு பிரிந்தன. உச்சி எனக்கு சிலிர்த்தது. வேகமாய் எழுந்திருக்க முயன்றேன். பெட்டிக்குள் இருந்து யூனாவின் உதடு கஷ்டமாய்ப் பிரிந்தது. ‘‘தாஸ்...’’
பிரமித்துப் போய் பார்த்தேன். அந்தக் குரலை, அவள் உடலில் இருந்து கேட்கிறேன்.

‘‘தாஸ்... தப்பு நடந்துருச்சு. உடம்பைப் பார்த்ததும், என் உயிர் அதில் சேர்ந்திருச்சு. ரொம்ப நேரம் இல்லை. இன்னும் அதிக பட்சம் அரைமணிநேரத்தில, நான் நார்மலாகி எழுந்திருச்சிடுவேன். அப்படி நடந்திடக் கூடாது. உடனே தீயைப் பத்த வை...’’‘‘யூனா... ப்ளீஸ் நீ சாகவேண்டாம். நான் உன்னைக் கொல்லமாட்டேன். என்னால முடியாது!’’‘‘உன்னோட அன்பு புரியுது தாஸ். ஆனா, நான் உயிர்பிழைச்சிடக் கூடாது தாஸ். அப்படி பிழைச்சிட்டா அப்புறம் எனக்கு மரணமே இல்லை. உன்னோட காலத்துக்குப் பிறகும் நான் இருப்பேன். அது பெரிய நரகம்.

அந்த நரகத்துல என்னைத் தள்ளி
விட்டுறாத. என்னை எரிச்சிடு...’’
‘‘யூனா... என்னால முடியாது.’’ கண்களில் கண்ணீர் நிரம்பியது.
‘‘எனக்கு நல்லது செய்யணும்னு நெனைச்சா... இந்த உதவியைச்
செய் தாஸ்... எனக்கு உயிர் வந்து கொண்டே இருக்கிறது ப்ளீ...ஸ்்!’’ அவள் குரல் உடைந்துபோய் கெஞ்ச... கண்களை இறுக்க மூடிக் கொண்டேன்.
‘‘தாஸ்...’’

பெட்டியின் மூடியை ஓங்கி அறைந்து மூடினேன். அத்தனை வேகம் எனக்கு எங்கிருந்து வந்தது என்றே தெரியவில்லை. மிச்ச
மிருந்த பெட்ரோலையும் சேர்த்து ஊற்றி... ஒரு வினாடி தயங்கி... உடனே மனதை மாற்றிக் கொண்டு தீக்குச்சியைப் பற்ற வைத்து
பெட்டியின் மீது வீசினேன்.குப்பென்று பற்றிக் கொண்ட தீ... பெட்ரோலுடன் இரண்டறக் கலந்து கொழுந்துவிட்டு எரிந்தது. சில
நிமிடங்களில் ‘டொம்’ என பெருத்த சத்தத்துடன் வெடித்தது. சுழன்று எரிந்த தீயையும், அதில் இருந்து கிளம்பி வானம் நோக்கிச் சென்ற புகையையும் வெறித்துப் பார்த்தபடியே விறுவிறுவென காரை நோக்கி நடந்தேன்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு நான் தூங்கிக் கொண்டிருந்தபோது செல்போன் அடித்தது. தூக்கத்திலேயே எடுத்துப் பார்த்தேன். ஒன்றியம்
பெருமாள் அழைத்தார். அவரிடம்தான் டாலர், தங்கத்தை மாற்றக் கொடுத்திருந்தேன். படக்கென எழுந்து உட்கார்ந்து போனை அழுத்தினேன்.
‘‘பெருமாள் சார் வணக்கம். மாத்திட்டீங்களா?’’
‘‘கவலைப்படாத. எல்லாம் முடிஞ்சிடுச்சு...’’
என் உடலி–்ல் உற்சாக ரத்தம் பாய்ந்தது.

எனக்கு பேராசை எல்லாம் இல்லை. பத்து லட்சம் கடனை அடைக்கவேண்டும். மீண்டும் லேபரட்டரி உருவாக்க, ஆராய்ச்சிக்குத் தேவையான
வசதிகளை ஏற்படுத்திக்கொள்ள... கூடுதலாக ஒரு பத்து லட்சம் கிடைத்தால் போதும்.

‘‘தம்பி தாசு... நீ கொடுத்த டாலர் பணம் எதுக்கும் உதவலை. செல்லரிச்சு, நைஞ்சு போயிருச்சு. அதும்போக, அதை மாத்தப் போய் போலீஸ்ல புடிபட்டா... கதை முடிஞ்சது. இது எப்டிறா கிடைச்சதுனு டவுசர
கிழிச்சிடுவானுங்க. அந்தப் பணம் கையில இருக்கிறதே ஆபத்து.

அதனால...’’
‘‘அதனால...?’’
‘‘அவ்வளவு பணத்தையும் பெட்ரோல் ஊத்தி எரிச்சிட்டேன்...’’
‘‘ஆ...’’ நெஞ்சைப் பிடித்துக் கொண்டேன்.

‘‘அதிர்ச்சியாகாத. அந்தத் தங்கம் இருக்குல்ல. அதை மறந்திட்டியா? ஆனா, அதை மாத்தறதும் ரொம்ப சிரமம்பா. எல்லாமே பழைய காலத்து பிஸ்கட்டு. நம்ம பய மூலமா, சேட்டு ஒருத்தர் மொத்தமா ரேட்டு பேசி எடுத்துக்கிட்டார். 12 லட்சம் கொடுத்தாரு. 10 லட்சம் என் பணத்தை
எடுத்துக்கிட்டேன். புரோக்கர் பயலுக்கு ஒரு லட்சம். போக, உன் பங்கு ஒரு லட்சம் இருக்கு. நம்ம, மாரிகிட்ட கொடுத்து அனுப்புறேன்.

வாங்கிக்க. இந்த ஆராய்ச்சி, கீராய்ச்சி எல்லாம் விட்டுட்டு, இனியாவது பொழைக்கிற வழியைப் பாரு. என்ன சரியா?’’
‘‘கவலைப்படாத தாஸ். உன் கடனை அடைக்கலாம். நீ புத்திசாலி. உன் அறிவை வெச்சி, அந்த ஆராய்ச்சில கண்டிப்பா ஜெயிச்சிடுவ. நிச்சயமாக மாற்று எரிபொருள் கண்டு
பிடிச்சு, உலகளவுல பெரிய ஆளா
நீ வருவ. இது சத்தியம்...’’
இரண்டு நாட்களுக்கு முன் இரவில், காரில் போகும் போது யூனா என்னிடம் சொன்னது ஞாபகம் வந்தது.‘‘கண்டிப்பா யூனா. கண்டிப்பா இந்த ஆராய்ச்சியில ஜெயிப்பேன்.

நீ எனக்கு செஞ்சது ரொம்பப் பெரிய உதவி. என் கடன் முடிஞ்சிருச்சு. இனி, என் அறிவை வெச்சி, சாதிப்பேன். உன் வார்த்தையை சத்தியமாக்கு வேன்...’’ வாய்விட்டுச் சொன்னபடியே, புதிய நம்பிக்கையுடன் படுக்கையைவிட்டு தாவி எழுந்தேன்.      

பந்து விளையாடும் ப்ரியா!

சத்தமே இல்லாமல் பூரிக்கிறார் ப்ரியா பவானி சங்கர். லாக்டவுனுக்கு முன்னரே அருள்நிதி, எஸ்.ஜே.சூர்யா, ஹரீஷ் கல்யாண், அதர்வாவின் படங்களில் நடித்து முடித்துவிட்டு, அதன் ரிலீஸுக்கு காத்திருக்கிறார். இது தவிர ‘இந்தியன் 2’, ‘வான்’ என அடுத்தும் பொண்ணு பிசி. படப்பிடிப்பு இல்லாத நாட்களில் வீட்டில் டிவி முன் அமரும் ப்ரியா, அதில் ஃபுட்பால் வீடியோ கேம் ஆடியும் ஜாலியாகிறார்.


தோள் கொடுப்பாள் தோழி!

ஃபிட்னஸ் காதலியான சமந்தா, இப்போது புதுவகை ஒர்க் அவுட் ஒன்றை மேற்கொள்கிறார். வீட்டின் புல்வெளியில் எந்தவித எக்ஸர்சைஸ் கருவிகளும் எடுத்துக் கொள்ளாமல் கடினமான எக்ஸர்சைஸ் ஒன்றை அசால்ட்டாக செய்து அசத்துகிறார். அதை இன்ஸ்டாவிலும் தட்டி மகிழ, அடுத்த செகண்ட்டே லைக்கோ லைக்கென லைக்கியிருக்கிறார் காஜல் அகர்வால்.