ஏரோப்ளேன் ஹேண்ட்பேக்!உலக கோடீஸ்வரர்களின் மத்தியில் பிரபலமான பிராண்ட், ‘லூயி வூட்டன்’. ஆடம்பரப் பொருட்கள் தயாரிப்பில் முன்னோடி நிறுவனம் இது. பிரான்ஸைச் சேர்ந்த இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் அந்தஸ்தின் அடையாளமாகக் கருதப்படுகின்றன. ஹாலிவுட், பாலிவுட் நட்சத்திரங்கள் முதல் இங்கிலாந்து இளவரசி வரை இதன் முக்கிய வாடிக்கையாளர்கள். குறிப்பாக தோலினால் ஆன இதன் ஹேண்ட்பேக்குகளுக்குத் தனி மவுசு.

சமீபத்தில் 2021ம் வருடத்தின் இலையுதிர்கால வெளியீடாக விமான வடிவில் ஒரு ஹேண்ட்பேக்கை அறிமுகம் செய்துள்ளது ‘லூயி வூட்டன்’. எஞ்ஜின், இறக்கை, வால்பகுதி என அச்சு அசல் ஒரு விமானத்தைப் போல காட்சியளிக்கிறது இந்த பேக். இதை அமெரிக்காவைச் சேர்ந்த டிசைனரான வர்ஜில் வடிவமைத்துள்ளார். இதன் விலை 39 ஆயிரம் டாலர். அதாவது 28 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்!‘‘இந்த பேக்கை வாங்குவதற்கு பதிலாக ஒரு குட்டி விமானத்தையே வாங்கிவிடலாம்...’’ போன்ற கமெண்டுகள் தெறிக்கின்றன.

த.சக்திவேல்