கூல் நமீ!



Untitled Document



அழுக்குத்துணிகளை வெளுத்து வெண்மையாக்கும் சேத்துப்பட்டு டோபிகானா சலவைத் தொழிலாளர்களின் வாழ்க்கையில் படிந்துள்ள இருளை அகற்றி ஒளியேற்ற சம்பந்தப்பட்டோரின் மனம் வெளுக்க வேண்டும்!
- பி.ஆர்.மயிலப்பன், ஈரோடு.


உலகம் அழியும்போதும் அழியாத பிரான்சில் இருக்கும் புகாரெச் கிராமத்தைப் பற்றிப் படித்து சிலிர்த்தோம்.
- ஆர்.சிங்காரவேலன், திருவிடைமருதூர்.


 
மறைந்த ரவிச்சந்திரனின் நினைவுகளை மறக்காமல் வெளியிட்டு, சிறந்த நடிகருக்கு மரியாதை செலுத்தியிருந்தீர்கள்.
 
- வரலட்சுமி முத்துசாமி, சென்னை-37.


சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் ரஜினி என்றும் எளிமையான மனிதர் என்பதை மறுக்க முடியாது. சாதாரண பள்ளி ஆண்டு விழாவுக்கு வந்ததைப் பற்றி நேஷனல் செல்லையா நெகிழ்ச்சியாகக் கூறியிருந்தார்.
- துரை.சுப்ரமணியன், திருச்சி-17.


படிப்பதற்கு வயது ஒரு தடையில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக  38 வயதில் சிவில் எஞ்சினியரிங் எடுத்திருக்கும்  சிவக்குமாரை பாராட்டியே தீரவேண்டும்.
- கே.டி. முத்துவேல், கருப்பூர்.


நடிகர்திலகத்தின் நடிப்பையே 'காப்பி' அடித்த நடிகர்கள் வாழும் புண்ணிய பூமி இது. கூல் நமீதா கூல்!
- ந.பேச்சியம்மாள், கடலூர்.


27 வயதில் இமாலயப் புகழடைந்த பாப் பாடகி எமி ஒயின்ஹவுஸின் வாழ்க்கை போதையில் முடிந்தது என்பது துயரச்செய்தி. என்ன செய்ய... அவரது பெயரிலேயே 'ஒயின்' என்ற போதை அரக்கன் இருக்கிறானே?
- டி.வெங்கடேஷ்பாபு, காரமடை.


சவாலாக திரைக்கதை அமைத்து 'அரவான்' போல படமெடுக்கும் முயற்சி, தமிழ்ப்படவுலகுக்கு பெருமை சேர்க்கும்!
-  மல்லிகா அன்பழகன், சென்னை-78.


அமலா பால் தன் கண்களால் ரசிகர்களை கிறங்கடிப்பதில் டாப். அதேபோல் நடிப்பிலும் டாப் என்றால் மகிழ்ச்சியே!
 
- எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.


குழந்தைகளுக்கு தாய்ப்பால் தரமுடியாத தாய்மார்களுக்கு இந்த 'குளோனிங் பசு தாய்ப்பால்' வரம்தான். தோட்டத்தில் மேயுது குளோனிங் பசு!
 
- டி.வசந்தா, திண்டுக்கல்.


'சுட்ட கதை சுடாத நீதி'யில் நிதர்ஸனா 'எதையும் முழுமையாக விசாரிக்காமல் நம்பக்கூடாது' என்ற நீதியை உணர்த்தியிருந்த விதம் அருமை!
- இரா.வளையாபதி, கரூர்.


அன்னா ஹசாரேயின் படம் ஒட்டப்பட்ட கவர்ச்சி உடையில் காசுக்காக கண்றாவி போஸா? நேஹா தூபியா நம் ஜனநாயகத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்!
 
-எம்.சம்பத், கரூர்.