விடுங்களேன் நயனை!



Untitled Document



'நடிப்பு நமக்குச் சரிப்படாது' என்று ஒதுங்க நினைத்த சூர்யா, அதே சினிமாவில் இன்று அசத்திக் கொண்டிருக்கிறார். 'திருப்புமுனை'யைத் திறந்து வைக்க சரியான ஆள் சூர்யாதான். தொடர் வெற்றிபெற வாழ்த்துகிறோம்.
- ரமேஷ்குமார், ஒண்டிப்புதூர்.


'என் குடும்பத்தை நான் பாத்துக்கறேன்; நீ உன் குடும்பத்தைக் கவனி' என்று ரசிகர்களுக்கு பளிச்செனச் சொல்கிற துணிச்சல் அஜித் தவிர யாருக்கும் வராது. 'ரசிகர் மன்றங்களை வைத்து என்ன பண்ணலாம்' என யோசிக்கும் ஹீரோக்களே... தல பதிச்சது தனி முத்திரை.
- சந்தோஷ், வேலூர்.


 
கலகலப்புக்குப் பஞ்சம் வைக்காத பாக்கியம் ராமசாமியும் அதே கலகலப்பை பளிச்சென ஓவியத்தில் பதித்து விடுகிற ஜெயராஜும் சேர்ந்துட்டாங்களா? 'சிரிப்பும் சிந்தனையும்' தொடர் ஜாலி ரூட்ல கிளம்பிட்டது.
 
- கலாவதி பாலகிருஷ்ணன், மதுரை.


'ரஜினி எப்படி இருக்கார்' என்று அறிய ஆர்வமில்லாத யாரும் இருப்பார்களா? அவரது நண்பர் ராஜபகதூர் சொன்ன தகவல்கள், பல வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும்.
- எஸ்.மோகனா, வந்தவாசி.


'பலன் கிடைத்ததா' என்று தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியாவிட்டாலும், அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதம் முடிந்தவரையில் சந்தோஷம்தான்.
- செந்தூர் முருகன், கோவை.


தமிழர் பகுதிகளிலுள்ள கோயில்களையெல்லாம் புத்தமடங்களாக மாற்றிக் கொண்டிருக்கும் ராஜபக்ஷேவுக்கு, ரங்கநாதர் சிலை மேல் என்ன அக்கறை வரப்போகிறது? காலம்தான் சிங்கள அரசுக்குப் பாடம் புகட்ட வேண்டும்.
- சந்திரமோகன், தஞ்சாவூர்.


'தி.நகர், ரங்கநாதன் தெரு' என்றால் இப்போதெல்லாம் கண்முன்னால் வருவது அந்த ஜன நெருக்கடிதான். கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்டவர்கள் காலம் தாழ்த்தாமல் செய்ய வேண்டும்.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.


டான்ஸ் ஆடுபவர் ஒருத்தரோடுதான் குடும்பம் நடத்தக் கிளம்பியிருக்கிறார் நயன்தாரா. இதில் 87 வயது நாகேஸ்வர ராவுக்கு வேறு அவருடன் டான்ஸ் ஆட ஆசையா? விடுங்களேம்பா நயனை!
- தினேஷ், இளம்புவனம்.


'காற்றின் கையெழுத்து' நினைவு கூர்ந்த அந்தக்காலச் சென்னை கொள்ளை அழகு. 'ராட்சஸ தாலாட்டு'க்கான அந்த அர்த்தமும் அத்தனை நிஜம்.
 
- ப.திருமுருகன், மணல்மேடு.