மெனுவின் விலை ரூ.50 லட்சம்!பொதுவாக பெரும் ஹோட்டல்களின் மெனுவில் உள்ள உணவுப் பொருட்களின் விலைதான் நம் வாயைப் பிளக்க வைக்கும். ஆனால், வெறும் மெனுவின் விலையே பலரின் புருவத்தை உயர்த்த வைத்திருக்கிறது. அப்படி அந்த மெனுவில் என்ன ஸ்பெஷல் என்கிறீர்களா?

டைட்டானிக் கப்பல் மூழ்கி, ஏராளமானோர் இறந்து நூறு வருடங்களுக்கு மேலாகிவிட்டதை அனைவரும் அறிவோம். ஆனாலும் டைட்டானிக் கப்பலைக் குறித்த ஏதாவது ஒரு செய்தி இன்றும் வந்து கொண்டிருக்கிறது என்பது ஆச்சர்யம். 

சமீபத்தில் அந்தக் கப்பலில் பயணம் செய்த முதல் நிலை பயணிகளுக்கான இரவு உணவு மெனு கிடைத்துள்ளது. பனிப்பாறையின் மீது டைட்டானிக் கப்பல் மோதுவதற்கு முன்பான இரவில் பரிமாறப்பட்ட உணவின் மெனு அது என்று சொல்கின்றனர். அந்த மெனுவைத்தான் ஏலம் விடப்போகின்றனர். குறைந்தபட்சம் 50 லட்ச ரூபாய்க்கு ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

த.சக்திவேல்