நண்பன் உதவியால் கின்னஸ் சாதனை!நியூயார்க்கைச் சேர்ந்த கேமரூனும், ஜூலியனும் இணை பிரியாத நண்பர்கள். தன் நண்பனின் உதவியுடன் ஓர் அசாதாரணமான கின்னஸ் சாதனையைப் படைத்திருக்கிறார் கேமரூன். அவரது வயது 18. ட்ரோன் மூலம் 469.5 அடி உயரத்திலிருந்து வீசப்பட்ட டென்னிஸ் பந்தை வெறுங்கையால் பிடித்திருப்பதுதான் கேமரூனின் கின்னஸ் சாதனை. 
இதற்கு முன்பு இவ்வளவு உயரத்திலிருந்து பூமியை நோக்கி விழும் பந்தை யாரும் பிடித்ததில்லை. இந்தச் சாதனையை செய்வதற்காக இரண்டு மாதங்களுக்கு மேல் தீவிரமான பயிற்சியை மேற்கொண்டிருக்கிறார் கேமரூன்.

ட்ரோன் மூலம் பந்தை வீசி  பயிற்சி செய்வதற்காக ஜூலியன்தான் உதவியிருக்கிறார். ஜூலியன் ஒரு ட்ரோன் பைலட் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு உயரத்திலிருந்து விழும் பந்தைப் பிடிக்கும்போது கைகளுக்கு பலத்த அடி படும் என்று கேமரூனுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கிளவுஸ் அணியச் சொல்லி பரிந்துரைக்கப்பட்டது.  
துணிச்சலுடன் வெறுங்கையால் இச்சாதனையைச் செய்திருக்கிறார். அவருக்கு அடி எதுவும் படவில்லை.

த.சக்திவேல்