உலகிலேயே ஏழ்மையான நாடு!
ஆம். கிழக்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் புருண்டிதான் உலகிலேயே ஏழ்மையான நாடு. சராசரி ஆண்டு வருமானம் இங்கு ரூ 20,000 தான். மட்டுமல்ல; சராசரியாக ஒவ்வொரு குடும்பத்திலும் ஏழு, எட்டு குழந்தைகள் உண்டு. இதனால் உலகிலேயே குழந்தையாக இருக்க மிக மோசமான நாடு எனவும், உலகிலேயே மிக அதிருப்தியாக இருக்கும் மக்களைக் கொண்ட நாடு எனவும் இதே புருண்டி தேர்வாகியுள்ளது.
 நாட்டில் 80% வேலைவாய்ப்புகள் விவசாயத்தின் மூலம்தான் கிடைக்கிறது. நாட்டில் மூன்றில் ஒருவருக்கு வேலை இல்லை. அப்படியே வேலை கிடைத்தாலும் வருமானம் இந்திய மதிப்பில் ரூபாய் இருபதாயிரம்தான். ம்ஹும். இது மாத வருமானம் அல்ல. ஆண்டு வருமானம்!
இப்படி கொடூர வறுமை இருக்கும் நாட்டிலும் பணக்காரர்கள் இருக்கத்தானே செய்வார்கள்?
அதன் தலைநகர் புஜும்பராவில் பணக்காரர்கள் வசிக்கும் பகுதி ஒன்று உள்ளது. இங்கு சராசரியாக வீடுகளின் மதிப்பு 15 - 20 கோடி இந்திய ரூபாய்களாக உள்ளது. அனைத்து வீடுகளிலும் மிக பிரமாண்டமாக கேட்கள் பூட்டப்பட்டு தெருக்களில் ஆள் நடமாட்டமே இல்லாமல் அமைதியாக ஐரோப்பா, அமெரிக்காவின் மேட்டுக்குடி நகர்ப்பகுதிகள் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது!
நியாண்டர் செல்வன்
|