வேடிக்கை பார்த்தவரை வேடிக்கை பார்க்கிறார்!
ப்ரக்யானந்தா, கார்ல்சனைத் தோற்கடித்த அந்தத் தருணம்... அட்டகாசம். பின்னணி இசையுடன் ரீல்ஸாகத் தெறிக்கவிடுகிறார்கள். அப்படியே பார்த்துக்கொண்டே போனால் ஒரு பழைய போட்டியில் கொண்டு போய் விட்டது. 13 வயதுப் பொடியன் கார்ல்சன், காஸ்பரோவை எதிர்த்து ஆடுகிறார். ஒரு நகர்வை முடித்துவிட்டு காஸ்பரோவின் நகர்வுக்குக் காத்திருக்கிறார்.
காஸ்பரோவ் யோசித்துக்கொண்டே இருக்கிறார். கார்ல்சனுக்கு போரடிக்கிறது. அப்படியே எழுந்து பக்கத்தில் ஆடுபவர்களை வேடிக்கை பார்த்துவிட்டு வருகிறார்!அந்த கார்ல்சனைத்தான் ப்ரக்யானந்தா தூக்கியிருக்கிறார்!
கே.எம்.கணபதி
|