ரஜினின்னா ரஜினிதான்!



Untitled Document



டான்ஸ் மாஸ்டர், நடிகர், இயக்குநர், சமூக சேவகர் என பல அவதாரங்கள் எடுத்த ராகவா லாரன்ஸின் ஆலய சேவை அவதாரமும் பலே!
- துரை.சுப்ரமணியன், திருச்சி-17.


+2 கணிதம் - சென்டம் வாங்க டிப்ஸ்’ - வருங்காலத் திலகங்கள் வெற்றிப்பவனி வர உதவும் கட்டுரை.
- சி.மகேஷ், சென்னை-83.


 
இன்டர்நெட் இணைப்பே இல்லாமல் ரஜினி பற்றிய சுவையான செய்திகளை வெப்சைட் மூலம் பார்க்கலாம் என்ற தகவல் வித்தியாசமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது. ரஜினின்னா ரஜினிதான்!
 
- ஆர்.பிருந்தா, பெங்களூரு.


‘வன்முறை எதையும் சாதிக்காது’ என்று வன்முறையின்றி சொல்லவரும் ‘கம்பன் கழகம்’ படமும் அதன் இயக்குநர் அஷோகனும் வெற்றி பெற வாழ்த்துவோம்.
 
- அ.கு.ப.இரகுநாதன், பூவிருந்தவல்லி.


‘காந்திஜியின் காலணியை வைத்திருக்கிறோம்; பாதையைத் தொலைத்து விட்டோம்’ என்ற பழநிபாரதியின் ‘காற்றின் கையெழுத்து’ இதயத்தை அறைந்தது.
- பி.என்.ஜெய்சங்கர், திருவாரூர்.


‘அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே...’ என்ற பாடல் ஞாபகத்துக்கு வந்தது கங்கை அமரன் - இளையராஜா உறவில் விழுந்த விரிசலைப் பற்றிப் படித்தபோது!
 
- ஆர்.கே.லிங்கேசன்,மேலகிருஷ்ணன்புதூர்.


வண்ணப்பறவைகளின் எண்ணக்கோலங்கள் தொகுப்பு ‘அடடா’ சொல்ல வைத்தது!
- இரா.வளையாபதி, கரூர்.


‘ரெடிமேட் கோலத்தில் ரெடி மணி’ - முதுகை வளைத்து, குனிந்து, நிமிர்ந்து கோலம் போடுகிறவர்களுக்கு இன்ஸ்டன்ட் கோலம் வரப்பிரசாதம்தான்!
-என்.வி.சீனிவாசன், சென்னை-63.


அண்ணாந்து பார்க்கும் உயரத்தில் இருப்பவர்களின் அடிச்சுவட்டை திரும்பிப் பார்க்கும் ‘திருப்புமுனை’ பகுதி சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு ஒரு அரிச்சுவடி!
 
- கவியகம் காஜுஸ், கரூர்.


‘விநோத ரஸ மஞ்சரி’யில் பெண் பாடிகார்டுகளுக்கு கொடுக்கப்படும் பயிற்சியையும், கிராக்கியையும் பார்த்தால் இனி யாராவது பெண்களை ‘வீக்கர் செக்ஸ்’ என்று சொன்னால் ‘நச்’சென உதை விழும் போல!
 
-பி.ஆர்.மயிலப்பன், ஈரோடு.


வாரா வாரம் விறுவிறுப்பு கூடிக்கொண்டே போகிறது மெட்டி ஒலி திருமுருகன் எழுதும் ‘விஜயா டீச்சர்’ தொடரில்! நம் பக்கத்து வீட்டில் நடப்பதைப் பார்ப்பது போலவே உணர்வு மேலிடுகிறது.
-எஸ்.சுந்தரி, சென்னை-28


‘பிரச்னை தீர்க்கும் திருத்தலங்கள்’ வாழ்வுக்கும் பயன்தரும் விதத்தில் உள்ளது.
 
-எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.