ஜாலி புதிர் உலகம்



யாருக்கு நிறைய நேரம் இருக்கிறது?

இந்த இருவரில் யாருக்கு நிறைய நேரம் இருக்கிறது? விடையை அறிந்ததும் ‘இப்படி ஒரு கடியா?’ என்று அலறக்
கூடாது!


மூன்றையும் பொருத்துங்கள்!

மூன்று பெட்டிகள். ஒன்றில் கதைப் புத்தகங்கள். இரண்டாவதில் கவிதை நூல்கள். மூன்றாவதில் இரண்டுவித புத்தகங்களும் உண்டு.ஒரு பெட்டியின் மேல் ‘கதைப் புத்தகங்கள்’ என்றும், ஒன்றின்மேல் ‘கவிதைப் புத்தகங்கள்’ என்றும், ஒன்றின்மேல் ‘கதை ப்ளஸ் கவிதைப் புத்தகங்கள்’ என்றும் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால், இப்படி எழுதியதெல்லாமே தவறு. உதாரணத்துக்கு ‘கதைப் புத்தகங்கள்’ என்று எழுதப்பட்ட பெட்டியில் இருப்பது கதைப்புத்தகங்கள் மட்டுமே அல்ல. அதில் இருப்பது முழுவதும் கவிதைப் புத்தகங்கள் அல்லது இரண்டு வகை நூல்களும். நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். ஏதாவது ஒரு பெட்டியிலிருந்து ஒரே ஒரு புத்தகத்தை எடுத்துப் பார்க்கலாம். இதைக் கொண்டு மூன்று பெட்டிகளிலும் என்னென்ன உள்ளன என்பதைத் தீர்மானமாகச் சொல்ல முடியுமா?

சுற்றிச் சுற்றி!

கீழே உள்ள கட்டங்களில் 6 ‘சுற்றுகிற பொருட்கள்’ உள்ளன. ஒவ்வொரு விடையின் எழுத்துகளும் அடுத்தடுத்து (எந்தத் திசையிலும்) அமைந்துள்ளன. இந்த 6 பொருட்களின் எழுத்துகளையும் நீக்கிவிடுங்கள். மீதமிருக்கும் எழுத்துகளை வரிசைப்படுத்தினால் மற்றொரு சுற்றும் பொருள் கிடைக்கும்!



ஈ ஒத்துப் போகாதது எது?

கீழே உள்ள திரைப்படங்களில் எது மற்றவற்றோடு ஒத்துப் போவதில்லை?

1. நான் ஏன் பிறந்தேன்?
2. கண்ணன் ஒரு கைக்குழந்தை
3. எந்திரன்
4. வாழ்க்கை
5. கந்தசாமி
6. சந்திரமுகி
7. மகிழ்ச்சி
8. விருதகிரி
க்ளூ: ஆதியந்தம்

விடைகள்

அ. யாருக்கு நிறைய நேரம் இருக்கிறது?
ஜோதிடம் முழுமையாக  மேட்ச் (பொருத்தம் என்பதின் ஆங்கில வார்த்தை) பார்க்கிறார். ஆனால், இரண்டாம் படத்தில் உள்ளவர்  ஹைலைட்ஸ்   மட்டுமே பார்க்கிறார். அதனால் இரண்டாமவருக்குத்தானே நேரம் குறைவாக இருக்கிறது? ஆக, ஒப்பிடுகையில் ஜோதிடருக்குத்தான் நேரம் அதிகமாக உள்ளது!

ஆ. மூன்றையும் பொருத்துங்கள்! முடியும்.
1. ‘கதை ப்ளஸ் கவிதைப் புத்தகங்கள்’ என்று எழுதப்பட்ட பெட்டியைத் திறக்கிறீர்கள். உங்கள் கையில் வருவது கதைப் புத்தகம் என்றால் என்ன அர்த்தம்? அதில் இருப்பது கதைப் புத்தகங்கள் மட்டுமே. (ஏனென்றால், உள்ளே இருப்பதும் வெளியே எழுதப்பட்டிருப்பதும் ஒத்துப் போகாதவை.)
2. அப்படியானால் ‘கவிதைப் புத்தகங்கள்’ என்று எழுதப்பட்ட பெட்டியில் இருப்பது நிச்சயம் கதைப் புத்தகங்கள் மட்டுமே அல்ல. கவிதைப் புத்தகங்கள் மட்டுமேகூட அல்ல. எனவே அது ‘கதை ப்ளஸ் கவிதைப் புத்தகங்கள்’தான்.
3. மீதமிருக்கும் பெட்டியில் (‘கதைப் புத்தகங்கள்’ என்று எழுதப்பட்ட பெட்டியில்) இருப்பது கவிதைப் புத்தகங்கள் மட்டுமே. 
4. ‘கதை ப்ளஸ் கவிதைப் புத்தகங்கள்’ என்று எழுதப்பட்ட பெட்டியைத் திறக்கும்போது உங்கள் கையில் கிடைப்பது கவிதைப் புத்தகம் என்றால் உள்ளே இருப்பது வெறும் கவிதைப் புத்தகங்கள் மட்டுமே (ஏனென்றால் உள்ளே இருப்பதும் வெளியே எழுதப்பட்டிருப்பதும் ஒத்துப் போகாதவை).
5. நாலாம் குறிப்பை அடிப்படையாகக் கொண்டால் ‘கதைப் புத்தகங்கள்’ என்று எழுதப்பட்டிருக்கும் பெட்டியின் உள்ளே இருப்பது ‘கதை ப்ளஸ் கவிதைப் புத்தகங்கள்’தான்.
6. மீதமிருக்கும் பெட்டியில் இருப்பது கதைப் புத்தகங்கள் மட்டுமே.

இ. சுற்றிச் சுற்றி
1. கடிகாரமுள் 2. ரங்கராட்டினம்   3. உலகம்   4. தலை  5. சக்கரம்  6. பம்பரம்
மீதமுள்ள எழுத்துகளை வரிசைப்படுத்தினால் கிடைப்பது மின்
விசிறி.

ஈ. ஒத்துப் போகாதது எது?
கந்தசாமி. அதன் முதல் எழுத்தையும் கடைசி எழுத்தையும் இணைத்தால் தமிழ் வார்த்தை கிடைக்கவில்லை.  பிற வார்த்தைகளில் கிடைக்கிறது. முறையே நான், கதை, என், வாகை, சகி, மசி, விரி.