ஜோக்ஸ்



‘‘தூங்கினா மட்டும் இருமல் ஓவரா வருது டாக்டர்..!’’
‘‘அப்ப விடுங்க! தூங்காம இருக்கறதுக்கு மருந்து எழுதித் தர்றேன்...’’
- வைகை. ஆறுமுகம்,
வழுதூர்.

என்னதான் சுவத்திலே ‘போஸ்டர் யுத்தம்’ நடத்தினாலும்,
அங்கெல்லாம் குண்டு வெடிக்காது!
 குண்டுச் சட்டியிலே வண்டியோட்டியே வதந்தி
பரப்புவோர் சங்கம்
- அ.ராஜப்பன்,
கருமத்தம்பட்டி.

தத்துவம் மச்சி தத்துவம்

என்னதான் மிகப்பெரிய பணக்
காரரா இருந்தாலும், தன்னோட
பொண்ணு திருமணத்துக்கு ‘வெள்ளி’ பாத்திரங்களைத்தான் சீர்வரிசையா கொடுக்க முடியும்;
சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன் பாத்திரங்களைக் கொடுக்க முடியாது!
- நாட்களை வைத்து தத்துவ சீர் கொடுப்போர் சங்கம்
- ஏ.எஸ்.யோகானந்தம்,
ஔவையார்பாளையம்.

‘‘ரொம்ப அநியாயமா இருக்கு டாக்டர் நீங்க பண்றது...’’
‘‘எதைச் சொல்றீங்க..?’’
‘‘பேஷன்ட் அட்மிட் ஆகி நாலு வாரம் ஆகியும் அவருக்கு நர்ஸை கண்ணுலயே காட்டலையாமே..!’’
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

‘‘தலைவர் உண்மையைக் குழிதோண்டி புதைச்சுட்டார்னு எப்படிச் சொல்றே?’’
‘‘கட்சி ஆபீஸை சுத்தி குழியா தோண்டிக் கிடக்கே..!’’
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

‘‘பேங்க்ல பணத்தை கொள்ளை அடிச்சதும் இல்லாம, செக்யூரிட்டியை ஏன் கடத்திட்டுப் போனீங்க..?’’
‘‘கொள்ளையடிச்ச பணத்தை நாங்க பாதுகாப்பா எடுத்துப் போக வேண்டாமா சார்..?’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.

‘‘ஏன்யா... குற்றப்பத்திரிகையில கிசுகிசுவைக் கூடவா போடுவாங்க?’’
‘‘அதெல்லாம் அரசல் புரசலா கேட்ட குற்றச்சாட்டுக்களாம். அதான் கிசுகிசுவா சேர்த்திருக்காங்களாம் தலைவரே!’’
- எஸ்.கோபாலன், நங்கநல்லூர்.