தத்துவம் மச்சி தத்துவம்




வீட்டுல வெளிச்சம் வேணும்னா டியூப் லைட்டை மாட்டலாம்; டார்ச் லைட்டை யூஸ் பண்ணலாம். ஆனா சாட்டிலைட்டை கொண்டு வந்து மாட்ட முடியுமா?
- டார்க் ரூமில் இருந்த படி டார்ச்சர் ஐடியாக்கள் கொடுப்போர் சங்கம்
 டி.செல்வன்,
நெல்லையப்பபுரம்.

‘‘சிலைக்கு மாலை போடுற மாதிரி கனவு வந்ததுக்கு தலைவர் ஏன் திகிலடைஞ்சு கிடக்கறார்..?’’
‘‘அவர் கனவுல மாலை போட்டது அவரோட சிலைக்கேவாம்..!’’
- அ.ரியாஸ், சேலம்.

‘‘குதிரை பேரத்துக்கு அவர் ஒத்துக்கலை தலைவரே...’’
‘‘அப்புறம்?’’
‘‘சரக்கடிச்சுட்டு பேரம் பேசலாம்ங்கறாரு!’’
- அனார்கலி, தஞ்சாவூர்.

‘‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்னு சொல்லிருக்கக் கூடாது அரசே...’’
‘‘ஏன் தளபதியாரே..?’’
‘‘எல்லா போர் வீரர்களும் பதுங்கு குழி அமைத்து விட்டார்கள்..!’’
- அம்பை தேவா, சென்னை-116.

‘‘ரூம் போட்டு யோசிக்க லாட்ஜ்... குடிக்க லார்ஜ்... தலைவரை வாழ்த்த ஏஜ்... மூன்றும் இல்லாததால்
வாய்ப்புக்கு நன்றி கூறி
விடைபெறுகிறேன்!’’
- வீ.விஷ்ணுகுமார்,
கிருஷ்ணகிரி.

‘‘நேத்து நான் நகைக்
கடையை திறந்து வைக்கற மாதிரி கனவு வந்துச்சுய்யா...’’
‘‘சரியாப் போச்சு தலைவரே! அதான் உங்க வீட்டு லாக்கரையே உடைச்சி வச்சிருக்கீங்களா?’’
- டி.சேகர்,
திருத்துறைப்பூண்டி.

‘‘கபாலி திருடின வீட்டில் எல்லாம் கவரிங் நகைகளை வச்சு ஏமாத்திட்டாங்களாம் சார்...’’
‘‘அடடே... அப்புறம் என்னாச்சு ஏட்டய்யா?’’
‘‘அதையெல்லாம் வச்சு கவரிங் நகைக் கடை ஆரம்பிச்சு, திறப்பு விழாவுக்கு உங்களைக் கூப்பிடுறான்..!’’
- எல்.மூர்த்தி, பி.மணியட்டி.