ஹெல்மெட் கலாட்டா!



ஹெல்மெட் ஹெல்மெட் ஹெல்மெட்...

அந்த ஹெல்மெட் யூஸ் பண்றதால என்ன மாதிரியான நல்ல விஷயங்கள் இருக்குன்னு நாம பாப்போம்...

*நமக்கு கடன் கொடுத்த புண்ணியவான் ஆப்போஸிட்ல வந்தா, இனி மொகத்த திருப்பிட்டு வண்டிய ஓட்ட வேணாம். சாதாரணமாவே கண்டுக்காம போயிடலாம்.
*மண்டையில முடி இல்லயேன்னு இனி கவலைப்பட வேணாம். வண்டி ஓட்ற எல்லாரோட மண்டையும் பளபளன்னு பழனி ஆண்டவர் மாதிரிதான் இருக்குன்னு மனச தேத்திக்கலாம்.
*தைரியமா டாஸ்மாக்ல போய் கூலிங்(???) பீர் வாங்கலாம்.
*கொஞ்ச நாள் கழிச்சு ஹெல்மெட் அவசியமில்லனு சொன்னா... (கண்டிப்பா சொல்வாய்ங்க) ஹெல்மெட்ட கவுத்துப் போட்டு பூந்தொட்டியா யூஸ் பண்ணிக்கலாம்.
*இனி வண்டி ஓட்டும்போது செல்போன் பேசுனா ஃபைன் கட்ட வேண்டி இருக்காது, ஹெல்மெட்டுக்குள்ளயே செல்போன சொருகி வச்சுக்கலாம்.
*இனி நாமளும் ஆட்டோகாரங்க மாதிரி ஹெல்மெட் பின்பக்கம் வாசகங்கள் எழுதி வச்சு தத்துவம் சொல்லலாம்.
*காதலிய பார்த்தா கவனிக்காத மாதிரி போகலாம். காதலி கடுப்பேத்துனா செவுத்துல முட்டலாம். மண்டை உடையாது
*வண்டில ஹெட்லைட் போனாக்கூட ஹெல்மெட்டே ஹெட்லைட் மாதிரி ஆப்போஸிட்ல வர்றவனுக்குத் தெரியும். ஸோ, பல்பு வாங்குற செலவு மிச்சம்.
*சிக்னல்ல பிச்சைக்காரங்க தொல்லை தாங்கலன்னா ஹெல்மெட்ட கழட்டி தலைகீழா புடிச்சுக்கிட்டு, ‘நானும் பிச்சைக்காரன்தான்’னு பாவ்லா காட்டி தப்பிச்சுடலாம்.
*வீட்ல பூரி பலகை இல்லயேன்னு கவலைப்பட வேணாம். ஹெல்மெட் மேலயே மாவ அழுத்தி அழுத்தி ரவுண்டாக்கி எண்ணெயில போட்டு பூரி சுடலாம்.
*நமக்குப் பின்னாடி நிக்கிற வண்டிக்காரங்க நொய் நொய்னு ஹார்ன் அடிச்சா, டென்ஷனாகி சண்டை போட வேண்டியதில்ல.
*போலீஸ் எவ்ளோ திட்டினாலும் சிரிச்சிக்கிட்டே நிக்கலாம்.
*குதிரைக்கு கடிவாளம் கட்டி விட்ட மாதிரி நேரா வர்ற வண்டி மட்டும்தான் தெரியும். ஸோ, இனிமே சைடுல வர்ற ஃபிகர திரும்பிப் பார்த்து வண்டியோட சாக்கடைல விழவும் தேவையில்லை.

‘‘உன் செயினை யார்மா
பறிச்சது?’’
‘‘கறுப்பு ஹெல்மெட் போட்ட ஆளு சார்’’
‘‘அவன்தான் வண்டியை ஓட்டினானா?’’

‘‘இல்ல சார், ஓட்டினவன் பச்சை கலர் ஹெல்மெட் போட்டிருந்தான்.’’
‘‘சாட்சி யாராவது இருக்காங்களா?’’
‘‘ஒரு சிவப்பு ஹெல்மெட்காரர் இதைக் கண்ணால பார்த்தாரு சார்.’’

‘‘இப்படிச் சொன்னா எப்படிம்மா? ஏதாவது அடையாளம் இருக்கா?’’
‘‘சாட்சி பின்னால உக்கார்ந்திருந்த பொண்ணு வெள்ளை ஹெல்மெட் போட்டிருந்தாங்க சார்!’’
‘‘அட ஏம்மா, அதைப் போடாதவங்க யாருமே இல்லையா?’’
‘‘நான் மட்டும்தான் சார் போடல!’’
‘‘அப்ப உன் லைசென்ஸையும் ஆர்.சி புக்கையும் எடு! ஏன் ஹெல்மெட் போடலை?’’