கஞ்சம்



காலிங்பெல் ஒலிக்க கதவைத் திறந்தேன். மனைவி ரெஜினா ஷாப்பிங் போய்விட்டு திரும்பி யிருந்தாள்.‘‘என்ன ரெஜி நான் வர்றதுக்கு முன்னால நீயே ஷாப்பிங் போயிட்டியா?’’‘‘ஆமா, நானும் ஹவுஸ் ஓனரம்மாவும் போயிருந்தோம். அப்பப்பா! இருந்தாலும் மனுஷங்க இவ்வளவு கஞ்சமா இருக்கக் கூடாது!’’ - எக்கச்சக்க ஆதங்கம் அவளிடம்.‘‘ஏன், என்னாச்சு?’’

‘‘ரெண்டு பேரும் போனோம். ஆனா, அப் அண்ட் டவுன் நான்தான் ஆட்டோ பே பண்ணினேன். அவங்க நைசா நழுவிட்டாங்க! ஆட்டோவில் ஆரம்பிச்சி எல்லா விஷயத்திலும் காசு கையில் இருந்து பெயரவே மாட்டேங்குது!’’‘‘சரி நீ என்ன வாங்கின, அவங்க என்ன வாங்கினாங்க?’’‘‘நான் ஆயிரம் ரூபாயில நாலு புடவை வாங்கினேன்... அவங்க முந்நூறுல ஒண்ணே ஒண்ணு வாங்கினாங்க. நான் ஐநூறுல செருப்பு வாங்கினேன்...

அவங்க நூத்தி அம்பதுல செருப்பு வாங்கினாங்க. நான் இன்னும் ஐநூறுக்கு அது இதுனு பல ஐட்டம்ஸ் வாங்கினேன்... அவங்க எதுவும் வாங்கல. வரும்போது நான் மார்க்கட்ல மட்டன் வாங்கினேன்... அவங்க கீரை மட்டும்... சரியான கஞ்சம் இல்லிங்க..?’’‘‘ஆமாமா, அதனாலதான் அவங்க வீட்டு ஓனர்... நாம அவங்க வீட்டுல வாடகைக்கு குடியிருக்கிற டெனன்ட்!’’என் மனைவி மெர்சலாகி நின்றாள்.        

அ.ரியாஸ்