ஆடியின் அழகு கலெக்‌ஷன்ஸ்!தி சென்னை
சில்க்ஸ் மல்ட்டி சாய்ஸ்...

இந்த ஆடியில், மிடில் கிளாஸ் மக்களுக்கு மல்ட்டி சாய்ஸ் கொடுத்திருக்கிறது தி சென்னை சில்க்ஸ். `பாகல்புரி’, `ரேணியல் ஸ்பார்கல்’, `கிராக்கல்’ போன்ற ரகங்களுடன் `எம்ப்ராய்டிங் வொர்க்’ செய்யப்பட்ட வெரைட்டியான புடவைகளில் மாயாஜாலம் காட்டி அசத்துகின்றனர். `பாகல்புரி’ புடவைகள் விலை ரூ.450 முதல் ரூ.800 வரை. இதில், பட்டுப் புடவை அணிந்த உணர்வை ஏற்படுத்த நிறைய வேலைப்பாடுகளை நேர்த்தியாக செய்துள்ளனர். ரிச் லுக் தரும் `கிராக்கல்’ புடவைகள் 250 ரூபாயிலிருந்து துவக்கம். `எம்ப்ராய்டிங் வொர்க்’ புடவைகள் இன்னொரு அழகு ரகம்! இதன் விலை ரூ.500 முதல் ரூ.3000 வரை!  போத்தீஸ் வெரைட்டி...

பட்டுச் சேலை, சுடிதார் பிரியைகளுக்கு கலக்கல் சாய்ஸாக ஜொலிக்கிறது போத்தீஸ்! `வசுந்தரா லைட்’, `வஸ்த்ரகலா பட்டு’, `மயூரி மென்பட்டு’ என பட்டுப் புடவையில் வெரைட்டியான `நச்’ ரகங்கள் பின்னியெடுக்கின்றன. பார்ட்டிகளில் அணியும் வண்ணம் உருவாக்கப்பட்டிருக்கும் வஸ்த்ரகலா பட்டுகள் ரூ.3 ஆயிரத்திலிருந்து கிடைக்கின்றன. இதோடு, லைட் வெயிட் `கிஃப்டி’ சேலைகள் விதவிதமான கலர்களில் கண்ணைப் பறிக்கின்றன. விலை 800 ரூபாயிலிருந்து ஆரம்பம். ஹாஃப் ஸ்லீவ், ஃபுல் ஸ்லீவ் என சுடிதாரிலும் வித்தியாசம் காட்டுகின்றனர். இவை, விதவித மாடல்களில் ஆயிரம் ரூபாயிலிருந்து நான்காயிரம் ரூபாய் வரை உள்ளன.பிரின்ஸ் ஜுவல்லரி

கொள்ளை அழகு!

`முகூர்த்தம் கலெக்‌ஷன்ஸ்...’ என பிரின்ஸ் ஜுவல்லர்ஸின் கலக்கல் ஆடி சேல்ஸ் தகதகக்கிறது! தங்கம் விலை குறைவு, அடுத்தடுத்து வரும் திருமண முகூர்த்தம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தொடங்கியிருக்கிறார்கள் இந்த அல்ட்ரா ஆடி கலெக்‌ஷன்ஸை! பத்து சவரனில் ஆரம்பிக்கும் இந்தக் கலெக்‌ஷனில் இரண்டு வளையல்கள், நெக்லஸ், மோதிரம் என எல்லாம் லைட் வெயிட் ரகங்கள். நேர்த்தியான டிசைன்கள், அற்புதமான வேலைப்பாடுகள். இதனுடன், புராதன நகைகளும் கவனம் ஈர்க்கின்றன. ராக்குடி, ஏழு கல் காதணி, பாம்படம், தந்தட்டி என அனைத்தும் மனதைக் கொள்ளை கொள்ளும் அழகு!  

எஸ்.எம்.சில்க்ஸுக்கு அப்ளாஸ்!

காஞ்சிபுரம் பட்டுகளை ஆடியில் அள்ளித் தருகிறது எஸ்.எம்.சில்க்ஸ். ‘ஒரு புடவை விலையில் மூன்று புடவைகள் இலவசம்’ என தடாலடியாகக் களமிறங்கி இருக்கிறார்கள். ஃபேஷன் டிசைன் சில்க்ஸ், பிக் பார்டர், ஸ்மால் பார்டர், முப்பாகம், நியூ சாமுத்ரிகா போன்ற பட்டுகள் விதவித வண்ணங்களில் பளிச்சிடுகின்றன. அழகு ஜரிகைகள்... கச்சிதமான வடிவமைப்பு... விலையோ ரூ.675 முதல் ரூ.20 ஆயிரம் வரை மட்டுமே! வீட்டிலிருந்தபடியே வாட்ஸ்அப் வாயிலாக இந்தச் சேலைகளின் ஏ டூ இசட் விவரங்களைப் பெற முடியும் என்ற வசதிக்கே கொடுக்கலாம் தனி அப்ளாஸ்!

வசந்த் அன் கோ...

‘வாவ்...’ என ஆச்சரியப்படுத்துகிறது வசந்த் அன் கோவின் ஆடி ஜோடி ஆஃபர்! வீட்டு உபயோகப் பொருட்களின் கிங் மேக்கரான இந்நிறுவனத்தில் LED TV தொடங்கி EGG Boiler வரை அத்தனைக்கும் இருக்கிறது அதிரடித் தள்ளுபடி! இதில், நிறைய பேரின் சாய்ஸான LED TVக்கு இலவச இணைப்பாக மின்னுகிறது DTH. பெரும்பாலான பொருட்களுக்கு 40 முதல் 67 சதவீதம் வரை டிஸ்கவுன்ட். இதனுடன், வாக்கியப் போட்டி மூலம் ஒரு லட்சம் ரூபாய்க்குப் பொருட்களை வெல்லும் வாய்ப்பு வேறு!

ஸ்ரீ குமரன் ஸ்டோர்ஸின் தங்கப்பட்டு...

ஆடியின் அழகு கலெக்‌ஷனில் பெண்களுக்குப் பிடித்த இரண்டு விஷயங்களை ஒன்றிணைத்து புது வரவைத் தந்திருக்கிறது ஸ்ரீ குமரன் ஸ்டோர்ஸ்! தங்கத்தையும் புடவையையும் ஒன்றாக இழைத்து `தங்கப்பட்டு’ சேலையை ஜொலி ஜொலிக்க உருவாக்கியிருக்கிறார்கள். இந்தப் புடவையில் ஒன்பது சவரன் தங்கம் நேர்த்தியான வேலைப்பாடுடன் மின்னுகிறது. ஒரு புடவையில் 72 கிராம் தங்கம் என்றாலும் கனமோ கடினமோ இல்லாமல் மென்மையாக வடிவமைத்துள்ளனர். இதோடு, பாரம்பரிய பட்டுப் புடவைகளும் கண்ணைப் பறிக்கும் கொள்ளை அழகு!

சரவணா செல்வரத்னம் ஸ்பெஷல்

குறைந்த விலையில் நிறைய ஆஃபர் தந்து நம்மை வாய் பிளக்க வைக்கிறது சரவணா செல்வரத்னத்தின் ஸ்பெஷல் ஆடி கலெக்‌ஷன்ஸ்! மூன்று டெக்ஸ்டைல்ஸ், இரண்டு நகைக் கடைகள், ஒரு வீட்டு உபயோகப் பொருட்கள் கடை என எல்லாவற்றிலுமே உண்டு ஆஃபர் பிளஸ் `நச்’ கலெக்‌ஷன்ஸ்! `ஆஃப் சாரி டிசைன்’, `பிராவ் ஷோ நெட்வொர்க்’ என சேலை வெரைட்டியில் வண்ணங்கள் மிளிர்கின்றன. அழகு ததும்பும் டிசைன்கள், ஆல் இன் ஆல் கலெக்‌ஷன்ஸ் என எல்லாமே கொள்ளை அழகு! அதையும் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் தருவதுதான் ஆச்சரியம்! நகையில் வளையல்கள், நெக்லஸ் என அனைத்திலும் டிசைன்கள் `ஆஹா’ ரகம்!
தொகுப்பு: பி.கே