நியூஸ் வே



* ஷங்கரின் ‘எந்திரன் 2’வில் எமி ஜாக்சன் கமிட் ஆகியிருக்கிறார். பாலிவுட்டில் ‘சிங் இஸ் பிளிங்’ வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் ஒரு இந்திப் படமும் பண்ணுகிறது பொண்ணு!

* ‘பாகுபலி 2’வில் நடித்துக்கொண்டிருக்கும் ரம்யா கிருஷ்ணன், பீரியட் ஃபிலிம் எக்ஸ்பர்ட் ஆகிவிட்டார். இப்போது மலையாளத்தில் அவர் கமிட் ஆகியிருக்கும் ‘ஆடு புலி ஆட்டம்’ படமும் 600 ஆண்டுகளுக்கு முந்தைய கதையாம்!

* ‘வேதாளம்’ படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பைத் தொடர்ந்து மீண்டும் அஜித் - சிவா கூட்டணி தொடர்கிறது. அஜித்தின் ஆபரேஷன் முடிந்த பிறகு ஜூன் 2016 முதல் அந்தப் படம் தொடங்குகிறது.

* வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக குடிசைவாழ் பெண் கேரக்டரில் முதல் தடவையாக நடிக்கிறார் சமந்தா.

* ஆண்ட்ரியா தான் பாடும் பாடல்களுக்கு, மற்ற பாடகிகள் வாங்கும் தொகையில் பாதிதான் வாங்குகிறார். பாடுவது அவருக்கு ஹாபி என்பதால் இந்த சலுகை!

* கொஞ்சம் கொஞ்சமாக இந்தி, தெலுங்கிலிருந்து மறுபடியும் தமிழுக்கு வருகிறார் தமன்னா. ஜீவாவிற்கு ஜோடியாக ‘ஜெமினி கணேசன்’ படத்தில் கமிட்டட்!

* ‘‘என் தேவைகள் மிகக் குறைவு. அதனால், நான் எதைக் கேட்டாலும் என் பெற்றோர்கள் வாங்கிக் கொடுத்துவிடுவார்கள். அதோடு பணத்தை எப்படி நிர்வகிப்பது என எனக்குத் தெரியாது. அதனால் நான் சம்பாதிப்பதை அவர்களிடம் கொடுத்துவிடுகிறேன்’’ என அடக்கமான பெண்ணாகச் சொல்கிறார் சோனாக்‌ஷி சின்ஹா.

* திருப்பதியில், கடந்த ஆண்டு 9 கோடி லட்டுகள் சோல்டு அவுட். ஆனாலும் 150 கோடி ரூபாய் நஷ்டம் காட்டியிருக்கிறது தேவஸ்தானம்! லட்டு தயாரிக்க உதவும் பொருட்களின் விலை உயர்வும், பாதயாத்திரை பக்தர்களுக்கு இலவச லட்டு கொடுப்பதும்தான் நஷ்டத்துக்கு முக்கிய காரணமாம். ஆக, சீக்கிரமே லட்டின் விலையை ஏற்றலாம், அல்லது எடையைக் குறைக்கலாம், அல்லது இலவச லட்டுகளை நிறுத்தலாம்!

* ஹன்சிகா செம ஹேப்பி. சென்ற ஆண்டைப் போல இந்த ஆண்டும் மும்பை வீட்டில் அம்மா, அண்ணனுடன் தீபாவளியை கலர்ஃபுல்லாக கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்!

* விஜய், அட்லியின் படத்திற்குப் பிறகு பத்துக்கும் மேற்பட்ட இயக்குநர்களிடம் கதை கேட்டுவிட்டார். எஸ்.ஜே.சூர்யாவை மட்டும் மறுபடியும் வர
வழைத்து கதை கேட்டிருக்கிறார்.

* ‘‘அடுத்த ஆண்டு செலக்ட்டிவாத்தான் கதைகள் கேட்டு படம் பண்ண விரும்புறேன். ‘அரிமா நம்பி’ இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கும் படத்திற்கான வேலைகள்ல இப்போ இறங்கிட்டேன்!’’ என மனம் திறந்திருக்கிறார் விக்ரம்.

* பி.சி.ராம் ஒளிப்பதிவில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் தொடங்கிவிட்டது. இதில் சிவா விதவிதமான கெட்டப்களில் வருகிறார். அழகான நர்ஸ், மற்றும் வயதான பெண்மணி என இரண்டு கெட்டப்களில் சிவா வரப்போகிறார் என்றும் ஒரு தகவல்.

* மத்திய சட்ட அமைச்சர் சதானந்த கவுடா, சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட தனது மகன் கார்த்திக்கிற்கு திருமணப் பரிசாக ஒன்றேகால் கோடி ரூபாய் விலையுள்ள ஆடி கார் வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

* நயன்தாரா இப்போது எந்த ஹீரோக்களிடமும் பேச்சு வார்த்தையில் இல்லை. இதனால் யாரும் அவரைப் பரிந்துரைப்பதும் இல்லை. எனவே, இனி அடுத்த கட்ட ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்கத் தீர்மானித்துவிட்டார்.

* நந்திதா ஸ்வேதா பயணப் பிரியை. பைக் ரசிகையும் கூட! சமீபத்தில் பெங்களூருவில் டிராபிக் இல்லாத சாலைகளில், பல்சரில் பதமான
ஸ்பீடில் பறந்திருக்கிறார்.

* சொந்தப் படத்துக்காக புது இயக்குநர்களிடம் கதை கேட்கிறார் விஷால். ஆக்‌ஷன் இல்லாமல் ஒரு காதல் படத்தில் நடிக்க முடிவெடுத்திருக்கிறார் அவர்.

* கௌதம் - சூர்யா மனக்கசப்பு முடிவுக்கு வந்துவிட்டது. கைவசம் இருக்கும் படங்களை முடித்துவிட்டு, கௌதம் படத்தில் நடிக்கப் போகிறார் சூர்யா.

* மும்பையில் ஒரு திரைப்பட விழாவில் எம்.எஸ்.சத்யு, அடூர் கோபாலகிருஷ்ணன் போன்ற ஜாம்பவான்கள் அருகே, மயில் தோகை போல விரிந்த ஒரு கவுன் அணிந்து வந்து அமர்ந்தார் கங்கனா ரணாவத். ‘விருதுகள் பெற்ற நடிகை இப்படி வில்லங்க உடையில் வரலாமா?’ என கண்டனக் கணைகள் பறக்கின்றன.

* மும்பையைத் தொடர்ந்து சென்னையிலும் தனது ஜுவல்லரி ஷோரூமைத் திறந்திருக்கிறார் காஜல் அகர்வால். லைட் வெயிட் ஆபரணங்களிலிருந்து விதவிதமான கைக்கடிகாரங்கள் வரை அங்கே கிடைக்கும். விரைவில் கோவையிலும், மதுரையிலும் கிளை பரப்புவது ஐடியா!

அட்டையில்: காஜல் அகர்வால்
படம் நன்றி: தி சென்னை சில்க்ஸ்