1241 பேருக்கு அரசு வேலை நிச்சயம்!



குரூப் 2 தேர்வுக்குத் தயாரா?

தமிழ்நாடு அரசுப் பணியிடங்களை நிரப்பி வரும் டி.என்.பி.எஸ்.சி-யிடமிருந்து எப்போதடா அறிவிப்பு வரும் என எதிர்பார்த்திருக்கும் இளைஞர்கள் இப்போது பரபரப்பில். காரணம், குரூப் 2 தேர்வு அறிவிப்பு! குரூப் 2 தேர்வில் நேர்முகத் தேர்வுடன் கூடியது, நேர்முகத் தேர்வு அல்லாதது என்று இரண்டு விதம் உள்ளன. இம்முறை அறிவிக்கப்பட்டுள்ளது நேர்முகத் தேர்வுடன் கூடிய குரூப் 2 தேர்வுதான்!துணை வணிக வரித்துறை அதிகாரி, சார்பதிவாளர் கிரேடு-2, சிறை அதிகாரி, தொழிலாளர் உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி, ஆடிட் துறையில் உதவி ஆய்வாளர், கூட்டுறவுத்துறை முதுநிலை ஆய்வாளர், வருவாய்த்துறை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் காலியாக உள்ள 1241 இடங்களை நிரப்ப இந்தத் தேர்வு நடத்தப்பட உள்ளது.

கல்வித் தகுதி: ஏதாவது ஒரு இளநிலைப் பட்டம்

விண்ணப்பிக்கும் முறை: அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளம் (www.tnpscexams.net)  மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். வங்கி மற்றும் தபால் அலுவலகங்கள் மூலம் விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணத்தை செலுத்த வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பக் கட்டணம் ரூ.50. தேர்வுக் கட்டணம் ரூ.75.

முக்கிய தேதிகள்: ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் மே 29.

வங்கி, அஞ்சலகங்கள் மூலம் கட்டணம் செலுத்த ஜூன் 1 கடைசி நாள். முதல்நிலை தேர்வு ஜூலை 26ம் தேதி நடைபெறும்.

தேர்வு முறை: இந்தத் தேர்வு 114 மையங்களில் நடைபெற உள்ளது. முதல்நிலை தேர்வில் ஆப்ஜெக்டிவ் முறையில் கேள்விகள் இருக்கும். 300 மதிப்பெண்ணுக்கு 90 மதிப்பெண் எடுக்கும் அனைத்து சமூகத்தினரும் மெயின்தேர்வு எழுத தகுதி பெறுவார்கள். மெயின் தேர்வில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்புபோல் ஆப்ஜெக்டிவ் டைப்பாக இல்லாமல் தற்போதைய மாற்றத்தின்படி 300 மதிப்பெண்களுக்கு உரிய கேள்விகள் அனைத்துக்கும் எழுத்து மூலம்தான் பதில் அளிக்க வேண்டும். கேள்விகள் அனைத்தும் பட்டப்படிப்பு அளவில் இருக்கும். மூன்று மணிநேரம் நடைபெறும்.

மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றால் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத்தேர்வுக்கு 40 மதிப்பெண்கள். முதல்நிலை மற்றும் மெயின் எழுத்துத் தேர்வு ஆகியவற்றிற்கான பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை உள்ளிட்ட அனைத்து தகவல்களும் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு contacttnpsc@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரியிலும் 1800 425 1002 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.