மஞ்சள் தாமரை மலரே...




Mutharam magazine, Mutharam weekly magazine, Tamil Magazine Mutharam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

     மஞ்சள் தாமரை  மலரே...

தாமரை என்றாலே அதன் வெளிர் சிவப்பும், அகன்ற இதழ்களும்தான் நினைவுக்கு வரும். இதன் இனத்தில் வெள்ளை நிறத்துடன் காணப்படுவதை அல்லி என்கிறோம். ஆனால், மஞ்சள் நிறத்திலும் தாமரைகள் மலர்கின்றன. மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் சில அமெரிக்கப் பகுதிகளிலும் இந்த மஞ்சள் நிறத் தாமரைகள் மலர்கின்றன.

முதல்  சோதனைக்குழாய் எருமை!

மருத்துவ சிகிச்சைகளின் முன்னோடிகள்  நாம்  என்ற  பெருமை நமக்குப் பலநூறு ஆண்டுகளாகவே உண்டு. அதோடு நவீன கால மருத்துவ முன்னேற்றங்களை நடைமுறைப்படுத்துவதிலும் நாம் முன்னோடிகளே & குறிப்பாக கால்நடை மருத்துவத்தில். ஆமாம், சோதனைக் குழாய் மூலமாக முதன்முதலாக் எருமைக் கன்றை உருவாக்கியது இந்தியாதான்.

வரிகள் பலவிதம்!

மனித கைரேகைகள் ஒவ்வொன் றும் ஒவ்வொரு மாதிரியானவை. அவை ஒன்றுக்கொன்று மாறுபட்டவையும் கூட. இது பலநூறு கோடி மக்களுக்கும் பொருந்தும் & இது தெரிந்த விஷயம்தான். அதேபோல இயற்கை தனித்து அடையாளம் காட்டக் கூடிய இன்னொரு உயிர் & வரிக்குதிரை. ஆமாம், எத்தனை லட்சம் வரிக்குதிரைகள் இருந்தாலும் அவை ஒவ்வொன்றின் வரியும் வெவ்வேறானவை.

வாசனை  பால்தலை!

தபால் தலைகளில் பலவகை. சதுரம், நீள்சதுரம் தவிர வட்டம், முக்கோண வடிவங்களிலும் பல நாடுகளில் தபால் தலைகள் வெளி யிட்டுள்ளார்கள். முப்பரிமாண தபால் தலைகளும் உண்டு. ஆனால், வாசனையான தபால் தலையை முதன் முதலில் வெளியிட்ட நாடு தென்னாப்பிரிக்கா. இதில் வாசனையை மேற்புறத்தில் தடவுவதோடு, அதை ஒட்டும் பசையிலும் சேர்த்திருந்தார்கள் அங்கே.

இந்தியா டாகுமென்டரி

இந்தியாவைப் பற்றி முதன்முதலாக டாகுமென்டரி படம் தயாரித்தவர்கள் பிரெஞ்சுக் காரர்கள்தான். இந்தப் படம் 1752ம் ஆண்டு வெளியிடப்பட்டது. தலைப்பு: ‘டான் ஆன் வில்’.

விரலுக்கு  மதிப்பளித்தவர்கள்!

மோதிரம் அணியும் பழக் கத்தை முதன்முதலில் உல குக்கு அறிமுகப்படுத்தியவர்கள் எகிப்தியர்களே. உடலழகைப் பராமரிப்பதில் முதன்மை யானவர்களும் அவர்கள்தான். கழுதைப் பாலில் குளித்த அரசி கிளியோபாட்ரா ஒரு சிறந்த உதாரணம்.  அதுசரி, விரலுக்கு மோதிரம் அணிவித்த பிறகுதானே அதற்கு மோதிர விரல் என்று பெயர் ஏற்பட்டிருக்கும்; அதற்குமுன் அந்த விரலுக்கு என்ன பெயர் இருந்திருக்கும்?
 வித்யுத்