துளித்துளியாய்... 70 ஆயிரம் கோடி தங்கம்!




Mutharam magazine, Mutharam weekly magazine, Tamil Magazine Mutharam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

     வ்வொரு ஆண்டும் சராசரியாக டெல்லியில் 18 கோடி குளிர்பான பாட்டில்களும், மும்பையில் 12 கோடி பாட்டில்களும் விற்பனையாகின்றன.

ல்லாசக் கப்பல் ஒன்றை சவுதி அரேபிய மன்னர் வைத்திருக்கிறார். இதில் அனைத்து வசதிகளும்  உள்ளன. விலை ரூ.350 கோடி!

121 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் ஆண்டு தோறும் சராசரியாக 70 ஆயிரம் கோடிக்குத் தங்க நகைகள் விற்பனையாகின்றன. ரூ.9660 கோடிக்கு வைர நகைகள் ஏற்றுமதி ஆகின்றன.

ரும் 2025ம் ஆண்டுக்குள் உலகின் இரண்டாவது பெரிய நகரமாக மும்பை விளங்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

சீன எல்லையில் இருந்து 30 கி.மீ. தூரத்தில் ஆரம்பிக்கும் சிந்து நதி, நம் நாட்டில் 130 கி.மீ. தூரம் பயணித்து பாகிஸ்தான் வழியாக கராச்சி அருகே கடலில் கலக்கிறது.

மெரிக்காவில் உள்ள கம்ப்யூட்டர்களின் எண்ணிக்கை உலகின் இதர நாடுகளில் உள்ள கம்ப்யூட்டர்களின் மொத்த எண்ணிக்கையைவிட அதிகம்!

1948 மார்ச் 29 அன்று நயாகரா நீர்வீழ்ச்சியில் நீர் கொட்டவில்லை. காரணம், பனிக் கட்டிகள் நீர் விழும் பாதையை அடைத்துக் கொண்டு விட்டன.

கிரேக்கர்கள் சூரியனை ‘அப்பல்லோ’ என்று பெயரிட்டு கடவுளாக வழிபட்டார்கள். உடல் நலத்தைத் தரும் தெய்வம் ‘அப்பல்லோ’ என்பது அவர்களது நம்பிக்கை.

விருதுநகர், தூத்துக்குடி. திருநெல்வேலி மாவட்டங்களில் கையினால் செய்யப்படும் தீப் பெட்டித் தொழிலை நம்பி 10 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர்.

லிம்பிக் விளையாட்டு எப்படி தோன்றியது தெரியுமா? ஒலிம்பிக்ஸ் கிரேக்கக்கடவுளான ‘காட்ஸெவ்ஸ்’ஸை மகிழ்விப்பதற்காகப் புனிதத்தலமான ‘ஒலிம்பியா’ என்ற இடத்தில் மத விழாவாகக் கொண்டாட ஆரம்பித்து இன்று மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவாக மாறியிருக்கிறது.

தீயணைப்புத் துறையின் அடையாளம் தலைகீழான பச்சை முக்கோணம்.

ணவு உண்ணும்போது சந்தோஷமாகச் சிரித்து அரட்டை அடிப்பதால் இரண்டாம் வகை நீரிழிவுக் கோளாறுகள் குறைவதாக ஐப்பானிய ஆய்வறிக்கை கூறு கிறது.
ஆர்.ஆர்.பூபதி,
கன்னிவாடி.