இதுதான் இந்தியா!




உலகின் மொத்த நிலப்பரப்பில் 2.4 சதவீதம் மட்டுமே கொண்டது இந்தியா. ஆனால் உலகின் மொத்த மக்கள்தொகை யில் 16 சதவீதம் பேர் இந்தியாவில் வசிக்கின்றனர்.

இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 34 கோடி பேர் நகரங்களில் வசிக்கின்றனர். இது நம் நாட்டின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 30 சதவீதமாகும். இது 2030ம் ஆண்டுவாக்கில் 59 கோடியாக உயரும் என்கிறது ஆய்வு. அதாவது இந்தியர்களில் பத்தில் நான்கு பேர் நகரங்களில் வசிப்பார்கள்.

இந்தியாவில் மக்கள் தற்போது பயன்படுத்தி வரும் மின்சாரத்தை சிக்கனமாக செலவழித்து சேமித்தால், இன்றைய பயன்பாட்டில் 25,000 மெகா வாட் வரை குறையுமாம். 

அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்து இந்தியாதான் மிகப்பெரிய அளவில் ‘ஆன்லைன்’ பயனாளிகளைக் கொண்டுள்ளது. 2014 மே மாதக் கணக்கின்படி இந்தியாவில் சுமார் 25 கோடிப் பேர் இன்டர்நெட்டைப் பயன்படுத்தி வருவது தெரிய வந்துள்ளது.

 ராஜிராதா, பெங்களூரு.