பிஸ்கெட் சாப்பிட்டால் அதற்கு அடிமையாகிவிடுவோமா?



ஏன்? எதற்கு? எப்படி?

நிச்சயம் இல்லை. அண்மையில் அமெரிக்காவின் கனக்டிகட் கல்லூரியில் எலிகளிடம் நடத்தப்பட்ட அறிவியல் சோதனையில், பிஸ்கட் சாப்பிடுவது மூளையில் கோகைன் அல்லது மார்பின் போன்ற வேதிப்பொருட்கள் ஏற்படுத்துவதைப் போன்ற சிறியளவு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

எனவேதான், நாம் பிஸ்கட்டை கண்டதும் பாய்ந்து நண்பனிடமிருந்து கூட இரக்கமேயின்றி பிடுங்கித் தின்கிறோம்; குறைந்தபட்சம் பகிர்கிறோம். சந்தோஷமோ, துக்கமோ மனதில் தூக்கலாக இருக்கும்போது பிஸ்கட்டுகளை அடித்து நொறுக்கி கடோத்கஜனாக அதிகம் சாப்பிடுவது உண்மைதான் என்றாலும் ஆனால் அது யாரையும் அடிமையாக்கிவிடாது என்பதே உண்மை.

Mr. ரோனி