புத்தகம் புதுசு!




If I Understood You, Would I Have This Look on My Face?: My Adventures in the Art and Science of Relating and Communicating
Alan Alda
Random House
Rs.1225.  

நடிகரும் எழுத்தாளருமான ஆலன் ஆல்டா, பிபிஎஸ் டிவியில் பல்வேறு ஆராய்ச்சியாளர்களை நேர்காணல் செய்யும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர். அப்போது, அவர்களின் அற்புதமான ஐடியாக்கள் மக்களிடம் சரியாக சென்று சேராததற்கான காரணத்தை கண்டுபிடித்து
எழுதியதுதான் இந்நூல். நிகழ்ச்சி மட்டுமில்லாமல் தன் வாழ்விலும் தான் நினைப்பதை  பிறருக்கு சரியானமுறையில் புரியவைக்காதபோது ஏற்படும் விளைவுகளைப் பற்றியும் அதற்கான நடைமுறைத் தீர்வுகளையும் விளக்கியிருப்பது  இந்த  புத்தகத்தின் சூப்பர் ஸ்பெஷல்.

A Crack in Creation:
Gene Editing and the Unthinkable Power to Control Evolution
Jennifer A. Doudna,  Samuel H. Sternberg
Rs. 1220.

நம் தலைமுறையின் மிகப்பெரும் கண்டுபிடிப்பு எது? பயிர் களின் மரபணுக்களை மலிவான விலையில் எளிதில் மாற்றியமைக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்ததுதான் அல்லவா? அணுகுண்டு  வெடிப்பு சோதனையை விட உலகையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது 2015 ஆம் ஆண்டு ஜெனிஃபர் டோட்னா என்ற ஆராய்ச்சியாளரால் கண்டறியப்பட்ட  மரபணுக்களை  இஷ்டம் போல மாற்றி அடுக்கும் CRISPR தொழில்நுட்பம்தான். ஹெச்ஐவி, புற்றுநோய்  உள்ளிட்ட  பல்வேறு  மரபணு  நோய்களை  டிஎன்ஏவை  திருத்தி மாற்ற முடியும் என்பது புதிய சாதனை கண்டுபிடிப்புதானே! அந்த கண்டுபிடிப்பு குறித்த மெய்சிலிர்க்கும் கதைதான் இது.