கடல் குன்றுகள்



அயர்லாந்தின் புகழ்பெற்ற சுற்றுலாத்தலம் ‘கிளிஃப்ஸ் ஆஃப் மொஹர்’. மூன்று கோடி ஆண்டுகளுக்கு மேலாக ஒரு ராஜாவைப் போல அட்லாண்டிக்  கடலைப் பார்த்து கம்பீரமாக நிற்கிறது இந்தக் கடல் குன்றுகள். சுமார் 14 கிலோ மீட்டர் தூரம் நீண்டு செல்லும் இக்குன்றுகள் உயர்ந்தும் தாழ்ந்தும்  காட்சியளிப்பது கொள்ளை அழகு. அதிகபட்சம் கடல் மட்டத்திலிருந்து 214 மீட்டர் உயரத்தில் எழுந்து நிற்கிற இந்தக் குன்றுகள் அரிய பறவைகளின்  சரணாலயமாகவும் உள்ளது. ஒரே நேரத்தில் 30 ஆயிரம் கடல் பறவைகளை இங்கே மட்டுமே நாம் காண முடியும். குன்றுகளின் அழகை தரிசிக்க  வருடத்துக்கு 15 லட்சம் பேர் வருகை புரிகின்றனர்.