ப்ரியங்களுடன்



‘50வது இதழ்’, ‘திருமணச் சிறப்பிதழ்’ புதுமை, இளமை, இனிமை... அற்புதம்!
- மயிலை கோபி, சென்னை-83.

50வது சிறப்பிதழுக்கு மேலும் மெருகூட்டுவது போல அமைந்தது ‘முதலீடே இல்லாத 50 தொழில்கள்’ பற்றிய யோசனைக் குறிப்புகள்!
- வத்சலா சதாசிவன், சென்னை-64 மற்றும் ஜே.தனலட்சுமி, சென்னை-12. 

தோழி இதழ் மேன்மேலும் வளர்ந்து 50வது, 100வது ஆண்டு இதழ்களாக பொலிவுடன் வெளிவர வாழ்த்துகள். தம்பதிகள் ஈகோவை விரட்டினால் ஓஹோவென்று வாழலாம் என்ற மருத்துவர் காமராஜின் கவுன்சலிங் பயனுள்ளது. சமையலறை டிப்ஸ்... பயனுள்ள பக்கம். வெட்டிங் கேக்ஸ் கட்டுரை அசத்தல்!
- வளர்மதி ஆசைத்தம்பி, தஞ்சாவூர்-6 (மின்னஞ்சலில்)...

இணைப்புப் புத்தகம் சூப்பர். எங்கள் வீட்டில் எல்லோருமே சூப், சாலட் பிரியர்கள். இனி, தினமும் சூப், சாலட் மேளாதான்!
- பத்மா மணி, சென்னை-89 (மின்னஞ்சலில்)... 

அம்மாவின் வாக்குப்படி நல்லதை நினைத்து நல்லதையே செய்வதால் நடிகர் தீபக் நம் வீட்டுப் பிள்ளையாகவே தெரிகிறார்.
 - அ.பிரேமா, சென்னை-68., ரேவதி ராகவன், சென்னை-45 மற்றும் கலா பெரியசாமி, சென்னை-94.

மாறி வரும் திருமண நிகழ்வுகளில் புதுமையைப் புகுத்தி, பாரம்பரியத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கும் ‘எபிக் வெட்டிங்ஸ்’ சித்ராவின் பணி நேர்த்தி!
- குமுதா, ராஜபாளையம் மற்றும் பிரபாலிங்கேஷ், மேலகிருஷ்ணன்புதூர்.

ஏரியல், அண்டர் வாட்டர் போட்டோகிராபி குறித்த தகவல்கள் வியப்பில் ஆழ்த்தின.
- மோனிஷா பிரியங்கா, திருச்சி-18.

ஒரு திருமணத்தை நேரில் பார்த்த பிரமையை ஏற்படுத்தியது காயத்ரி நாயரின் போட்டோ ஆல்பம்.
 - எம்.செல்லையா, சாத்தூர்.

‘உலகின் டாப் 10 தம்பதிகள்’ பற்றிய செய்திகளும் புகைப்படங்களும் அழகு!
- கே.ராஜேஸ்வரி, மணப்பாறை மற்றும் பானு பெரியதம்பி, சேலம்-30 (மின்னஞ்சலில்)...

உழைக்கும் வர்க்கத்துக்காக தனது உடல், பொருள், ஆவி அனைத்தையும் வழங்கிச் சென்றுள்ள கரென் சில்க்வுட்டின் வரலாறு நெஞ்சைத் தொட்டது.
- கலைச்செல்வி வளையாபதி, தோட்டக்குறிச்சி.

மனதைப் புரட்டிப் போட்ட நிகழ்வுகளை அசைபோடுவதை நிறுத்திவிட்டு, நடக்கப் போகும் நல்ல விஷயங்களில் கவனத்தைத் திருப்பினால் வாழ்க்கை நம் கையில் என்று மிக அழகாக விளக்கியுள்ளார் சுபா சார்லஸ்.
- பி.கீதா, சென்னை-68.

மலாலா தொடர் சந்தேகமே இல்லை... மேஜிக்கேதான்!
- பி.வைஷு, சென்னை-68 மற்றும் ஆர்.கீதா, தஞ்சாவூர்-1.

அ.வெண்ணிலா கேள்விகளையும் கேட்டு, தன் பிரசவத்தையே உதாரணமாக, பதிலாகச் சொல்லி சுவாரஸ்யமாக்கிவிட்டாரே! ‘குட் டச்...  பேட் டச்...’ல் குழந்தைகள் பாதிக்கப்படும் விஷயங்களைப் பட்டியலிட்டு பதைக்க வைத்துவிட்டார் க்ருஷ்ணி கோவிந்த். ஸ்வாமி ஓம்காரின் ‘சமையலுக்கு ருசியைக் கூட்டறது அதுல சேர்க்கிற பொருட்களால இல்லை... அன்புங்கிற பொருள் சேரும்போதுதான் உணவு ருசிக்கும்’ வார்த்தைகள் அருமை.
- ராஜி குருஸ்வாமி, சென்னை-88.

‘வார்த்தை ஜால’த்தில் பிரமிக்க வைத்துக் கொண்டிருக்கிறார் தீபா ராம். இரட்டைக் குழந்தைகள் இல்லாத பெற்றோர் கூட அந்த அனுபவத்தை உணரும் விதமாக ‘ட்வின்ஸ்’ தொடரில் அழகுபட விவரிக்கிறார் ஆர்.வைதேகி. 3 முக்கிய கீரைகளை பா.வின்சென்ட் விவரித்திருப்பது அட்டகாசம். வண்ணக் கோலங்கள் பற்றிய நினைவலைகளை ஏற்படுத்தி, படிக்கும் சூழலையே வண்ணமயமாக்கிவிட்டார் தீபா நாகராணி.
- பிரதிபா வள்ளியூர் ஏ.பி.எஸ்.ரவீந்திரன், நாகர்கோவில்.