ப்ரியங்களுடன்



உணவு விதி - அறிந்திடாத அறிந்திட வேண்டிய அதி உன்னத தகவல்களை படு சுவாரஸ்மாக சுவையுற எடுத்தியம்பி படித்து பயனுற வைத்தது.
- கவிதா சரவணன், திருச்சி.

டிசம்பர் 1-15, ‘தோழி’ இதழில் ‘தோழி சாய்ஸ்’ பகுதியில் ‘மேக்ஸிகாட்டன் குர்தா’ என்னை மிகவும் ஈர்த்தது. அந்தப் பக்கத்தைத் திருப்ப மனமில்லை.
- எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.

துன்பங்களை துடைத்தெறிவாள் அஷ்டபுஜ துர்க்கை (அம்மன்குடி) ஆலயத்தை வலம் வரவழைத்த கட்டுரையும் புகைப்படங்களும் பரவசத்தில்  ஆழ்த்திவிட்டன. சந்தோஷம் தரும் தரிசனம் தொடரை வாழ்த்தி வணங்குகிறோம்.
 - த.சத்தியநாராயணன், சென்னை.

‘காஞ்சனா ஜெயதிலகர்’ எழுதிய ‘‘நியமிக்கப்பட்ட ஓட்டத்தைப் பொறுமையா ஓடுங்க’’! கட்டுரை அருமை. வாழ்க்கை இனிமையாக இருக்க நல்ல பல  தகவல்களை சொல்லிய விதம் நன்றாக இருந்தது. மனதுக்கு இதமாகவும் இருந்தது.
- வத்சலா சதாசிவன், சென்னை.

செல்லுலாய்ட் பெண்கள் வரிசையில் நடிகை சந்திர காந்தாவின் திரை உலக அனுபவங்கள்... நச்சுனு ஒரு பதிவு.
- மயிலைகோபி, திருவாரூர்.

பெண்களை பாதிக்கும் நோய்கள் கட்டுரை, பெண்கள் தெரிந்து அதன் படி நடக்க வேண்டிய நலம் சேர்க்கும் அவசியம். பாராட்டுகள்.
- தஞ்சை ஹேமலதா, வெண்டையம்பட்டி.

சுவையான குழம்பு மற்றும் கறி வகைகள் இணைப்பு புத்தகம் இல்லத்தரசிகளுக்கோர் வரப்பிரசாதமாக கைமேல் பலன் தந்தது.
- கவிதா சரவணன், திருச்சி.

டிசம்பர் 1-15 இதழில் இடம் பெற்றிருந்த Dr.திலோத்தம்மாளின் தொடரான பெண்களை பாதிக்கும் நோய்களில் ஒன்றான உடற்பருமன் குறித்த  விளக்கங்களும், அதற்கான தீர்வுகளும் மிக மிக எளிமையான, எளிதில் புரிந்து பயன்பெறத்தக்கவைகளாக இருந்தன.
- வி. மோனிஷா பிரியங்கா, திருச்சி.

ஆண், பெண் இருபாலர்கள் மத்தியில் இன்று அதிகரித்து வரும் கழுத்துவலி, கீழ்முதுகு வலி போன்றவற்றிலிருந்து விடு பெற வித்யா ெலட்சுமி  கூறியிருந்த வழிமுறைகள் மிகுந்த ஆறுதல் அளிப்பதாக இருந்தன.
 - என். கலைச்செல்வி, கரூர்.