சைனீஸ் தோசை



என்னென்ன தேவை?

தோசை மாவு - 2 கப்.

பூரணத்திற்கு...


பொடியாக நறுக்கிய பூண்டு - 6 பல்,
 பச்சை, சிவப்பு குடைமிளகாய் - தலா 1/4 கப்,
வெங்காயம் - 1,
வெங்காயத்தாள் - சிறிது,  
எக்லெஸ் நூடுல்ஸ் - 2 கப்,
சோயா சாஸ், சில்லி சாஸ் - தலா 1 டீஸ்பூன்,
தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன்,
குறு மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்,
எண்ணெய் - 1 டீஸ்பூன்,
உப்பு - சிறிது.

எப்படிச் செய்வது?


பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்து நூடுல்ஸ், எண்ணெய், உப்பு போட்டு நூடுல்ஸை வேகவைத்து  எடுத்து, குளிர்ந்த நீர் ஊற்றி வடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து பூண்டு தாளித்து வெங்காயம்,  குடைமிளகாய், உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கி, நூடுல்ஸ், சோயா சாஸ், சில்லி சாஸ், தக்காளி சாஸ், மிளகுத்தூள்,  உப்பு போட்டு 10 நிமிடங்கள் கிளறி, வெங்காயத்தாள் சேர்த்து  கிளறி இறக்கவும். தோசைக்கல்லை சூடாக்கி மாவை  ஊற்றி தோசையாக வார்த்து, அதில் நூடுல்ஸ் கலவையை  பரப்பி  மாவு வெந்ததும் மூன்றாக மடித்து பரிமாறவும்.